ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சட்டமன்ற தொகுதி அதிமுக எம்.எல்.ஏ எஸ்.எம்.சுகுமார், கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்தை புறக்கணித்ததாகவும், இதனால் அவர் அதிமுகவிலிருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணையப் போவதாகவும் அரசியல் வட்டாரத்தில் வதந்திகள் பரவின. இந்தச் சூழலில், ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் காந்திராஜ் தலைமையில் நடைபெற்ற வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த சீராய்வுக் கூட்டத்தில் சுகுமார் எம்.எல்.ஏ கலந்து கொண்டார். இக்கூட்டத்தில் தனது தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் அவர் விரிவாகக் கேட்டறிந்தார்.
கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த எம்.எல்.ஏ சுகுமார், தான் அதிமுக தலைமை கூட்டத்தைப் புறக்கணித்ததாகப் பரவும் தகவல்கள் முற்றிலும் தவறானவை என்று மறுத்தார். ஆற்காடு தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகளை அதிகாரிகளிடம் எடுத்துரைப்பதற்காக, அதிமுக தலைமைக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரிடம் உரிய அனுமதி பெற்றுத்தான் இந்த மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் பங்கேற்றதாக அவர் விளக்கம் அளித்தார். மேலும், இக்கூட்டத்தில் தொகுதிப் பிரச்சினைகள் குறித்து அதிகாரிகளிடம் அதிக கேள்விகளை எழுப்பி விளக்கம் கேட்டது தான் மட்டும்தான் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அவர், தான் 100 சதவீதம் அதிமுகவைச் சேர்ந்தவன் என்றும், எடப்பாடி பழனிசாமியின் ஆதரவால்தான் இந்தத் தொகுதியில் வெற்றி பெற்று மக்கள் பணியாற்றி வருவதாகவும் பெருமிதத்துடன் கூறினார். “நான் இடுகாட்டிற்குச் செல்வேனே தவிர, கண்டிப்பாக மாற்றுக் கட்சிக்குச் செல்ல மாட்டேன்; அதிமுகவிலிருந்து ஒருபோதும் பின்வாங்க மாட்டேன்” என்று மிக உறுதியாகத் தெரிவித்த அவர், சமூக வலைத்தளங்களில் யாரும் இது போன்ற தேவையற்ற பதிவுகளைப் பதிவு செய்ய வேண்டாம் என வேண்டுகோள் விடுத்து வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…
சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…
கர்நாடக மாநிலம் உடுப்பி பகுதியைச் சேர்ந்த 38 வயதுப் பெண்ணான ரேகா, தனது கணவருடன் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக…
கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் வசித்து வரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்த இந்தியாவிற்கும் தற்போதைய நவீன இந்தியாவிற்கும் இடையே…
பெங்களூருவில் உள்ள ஃபோரம் மாலில் அமைந்துள்ள பிவிஆர் ஐநாக்ஸ் மல்டிபிளெக்ஸில் இயங்கி வந்த ஜூஸ் கடை, பயன்படுத்தப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும்…
அமெரிக்க இடைக்காலத் (மிட் டேர்ம்) தேர்தலில் ஆளும் குடியரசு கட்சி அடைந்த பெரும் தோல்வி, அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு அரசியல்…