arun

அவர் சொன்னது தப்பே இல்லை… ஆனா விஜய் சேதுபதியும் சேர்ந்து இப்படி பண்ணிட்டாரு… BB அருணுக்கு ஆதரவாக வீடியோ வெளியிட்ட அர்ச்சனா…

By admin on மார்கழி 17, 2024

Spread the love

பிக் பாஸ் தமிழ் சீசன் 8 தற்போது விஜய் டிவியில் 70 நாட்களைத் தாண்டி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. கடந்த வாரம் நடந்த எபிசோடில் போட்டியாளர்கள் அருணுக்கும் தீபக்கிற்கும் பிரச்சனை எழுந்தது. அதில் சமையல் செய்வது ஸ்கில் ஓரியண்டட் மற்ற வேலைகள் லேபர் ஓரியண்டட் என்ற ஒரு வார்த்தையை தீபக் கூறி இருப்பார். இதைப் பிடித்துக் கொண்ட அருண் அது எப்படி நீங்கள் லேபர் ஸ்கில் என்று பிரிக்கலாம் லேபர் என்கிற வார்த்தையை இந்த வீட்டுக்குள்ள நீங்க சொல்லக்கூடாது என்று மிகப்பெரிய பிரச்சனையாக்கி இருந்தார்.

   

இதை கடந்த வார இறுதி எபிசோடில் விஜய் சேதுபதி எடுத்து பேசி இருந்தார். அதில் அருணை வச்சு செய்து விட்டார் விஜய் சேதுபதி என்று தான் சொல்ல வேண்டும். லேபர் என்கிற வார்த்தை ஒன்றும் தரக்குறைவான வார்த்தை கிடையாது என்பதை அழுத்தம் திருத்தமாக பேசினார். கடந்த சனிக்கிழமை எபிசோடு முடிந்த உடன் இதுவரை தமிழ் பிக்பாஸில் நடந்திடாத ஒரு நிகழ்வு நடந்தது. அது என்னவென்றால் எபிசோடு முடிந்த பிறகு மீண்டும் அருண் இதைப் பற்றிய பேசிக் கொண்டிருக்கையில் பிக் பாஸ் பேசும் மைக்கில் வந்த விஜய் சேதுபதி வீட்டிற்குள் மைக்கிலேயே அருணிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டு இருந்தார். இந்த எபிசோடு மிகவும் பரபரப்பாக இணையத்தில் பேசப்பட்டது.

   

தற்போது அதைப்பற்றி கடந்த பிக் பாஸ் சீசனின் வெற்றியாளரும் தற்போது பிக் பாஸ் இன் போட்டியாளராக இருக்கும் அருணின் காதலியான அர்ச்சனா ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். அருணுக்கு ஆதரவாக பேசி இருக்கிறார். அவர் அந்த வீடியோவில் கூறியது என்னவென்றால் அருண் பேசியது தப்பே கிடையாது அவர் சொன்னது என்னன்னா இது ஒரு வீடு ஒரு ஃபேமிலி அதை வந்து நம்ம ரெஸ்பான்சிபில்டியா எல்லாரும் equal எடுத்து பண்ணனும். eliminate ஆகி ஆளுங்க குறைஞ்சிட்டாங்க அப்ப குறைவான ஆட்களுக்கு சமைக்கிறது கொஞ்சம் ஈஸியான வேலை தான்.

 

எல்லாரும் சரிசமமா நடக்கணும் அப்படிங்கற விதத்தில் தான் அருண் பேசி இருக்கிறார். ஆனால் அவ்வளவு பெரிய ஹோஸ்ட் 40 நிமிஷம் அருணிடம் மாத்தி மாத்தி கேள்வி கேட்கும் போது யாரா இருந்தாலும் அந்த இடத்தில் ஆடிப் போயிருவாங்க பயந்துருவாங்க. அப்படித்தான் அருண் பயந்துட்டாரு. இதை ஏன் இவ்வளவு பெரிய இஸ்யூவா ஹோஸ்டும் சேர்ந்துக்கிட்டு அவ்ளோ நேரம் ஏன் பண்ணுனாங்க. அதே நேரத்துல மறுநாள் இதே பிரச்சனை நடக்கும்போது தீபக்கும் அருணை பார்த்து Twister என்ற வார்த்தையை பயன்படுத்தி இருக்காரு.

அதுமட்டுமில்லாமல் லேபருக்கு டீ இவ்ளோதான் போடணுங்கறது எல்லாம் பேசியிருக்கிறார். அதை எல்லாம் லைட்டா கேட்டுவிட்டு அருணை மட்டும் ஏன் இப்படி திரும்பத் திரும்ப வச்சு டார்கெட் பண்ற மாதிரி பேசணும் என்று பேசி தன்னுடைய ஆதரவை தெரிவித்து இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலர் அர்ச்சனாவுக்கு அருண் செய்தது தவறுதான் நீங்கள் எதற்கு இப்போது இந்த போட்டியில் தலையிடுகிறீர்கள் கடந்த சீசனில் உங்களுக்கு ஓட்டுப் போட்டு வெற்றியடைய வைத்ததே தவறு என்று தோன்றுகிறது என்று அருணுடன் சேர்த்து அர்ச்சனாவையும் கமெண்ட்ஸில் நெட்டிசன்கள் திட்டி வருகின்றனர்.