Categories: சினிமா

“ஆட்டோகிராஃப் படத்தை மிஸ் பண்ணியதற்காக வருத்தப்பட்டேன், ஆனா ஒரு நல்லது நடந்தது”.. பிரபல நடிகர் பகிர்ந்த தகவல்..

Spread the love

தமிழ் சினிமாவின் கதை சொல்லல் முறையில் முத்திரை பதித்த திரைப்படங்களில் ஒன்று ஆட்டோகிராஃப். அதுவரை இயக்குனராக அறியப்பட்ட இயக்குனர் சேரன் அந்த படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். அவரோடு அந்த படத்தில் மல்லிகா, கோபிகா, சினேகா மற்றும் கனிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

தனது திருமணத்துக்கு அழைப்பிதழ் வைக்க செல்லும் சேரன், அவர் வாழ்வில் கடந்து வந்த நபர்களை சந்திப்பதே இந்த படத்தின் கதை. அதில் மையக் கதபாத்திரத்தின் பள்ளிப் பருவ காதல் மற்றும் கல்லூரி கால காதல் என கடக்கும் கதை, அதில் தோல்வியடையும் அந்த மனிதன் எப்படி தன்னுடைய வீழ்ச்சிகளில் இருந்து மீள்கிறான் என்பதே கதை.

இதை மிகவும் கவித்துவமாகவும் நாஸ்டாஜிக் அனுபவத்தோடும் உருவாக்கி இருந்தார் சேரன். அதனால் பெருவாரியான ஆண்களால் இந்த கதையோடு தொடர்புகொள்ள முடிந்தது. இதனால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படத்தில் சேரன் நடிக்கும் முடிவை எடுப்பதற்கு முன்பாக பல ஹீரோக்களிடம் இந்த கதையை சொல்லியுள்ளார்.

முதலில் நடிகர் விஜய்க்கு இந்த கதையை சொல்லியுள்ளார். ஆனால் அப்போது அவர் ஆக்‌ஷன் ரூட்டுக்கு மாறிக்கொண்டிருந்ததால் இந்த கதையில் அவர் நடிக்க மறுத்துள்ளார். பின்னர் இந்த கதையை நடிகர் பிரபுதேவாவுக்கு சொல்லி சம்மதம் வாங்கி வைத்துள்ளார் சேரன். ஆனால் ஷூட்டிங் செல்லும் நேரத்தில் இந்த படத்தில் சேரன் விலகியுள்ளார்.

அதன் பின்னர் பல கதாநாயகர்களுக்கு இந்த கதையை சொல்லியுள்ளார் சேரன். அதில் ஒருவர்தான் 90 களில் பிரபல கதாநாயகனாக இருந்த அரவிந்த் சாமி. ஆனால் அவர் அப்போது சினிமாவில் இருந்து விலகி தன்னுடைய வியாபாரத்தில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார். அந்த நேரத்தில்தான் சேரன் ஆட்டோகிராஃப் கதையை சொல்லியுள்ளார்.

அதனால் கதை பிடித்திருந்தும் அவரால் நடிக்க முடியவில்லை. பின்பு ஒரு நேர்காணலில் “தான் ஆட்டோகிராஃப் படத்தை மிஸ் செய்துவிட்டதற்காக வருந்தியதாகவும் ஆனால் அந்த படத்தின் மூலம் சேரன் நடிகராக அறிமுகமானது ஒரு நல்ல விஷயம் ” எனக் கூறியுள்ளார்.

vinoth

Recent Posts

தம்பி… உன் பொண்டாட்டி கான்ட்ராக்டரோட சுத்துறாடா… கண்முன்னே நடக்கும் அநியாயம்… வாயில் பூட்டு போட்டு வேடிக்கை பார்க்கும் கணவன்…!

இளம்பெண்ணிற்கு பெற்றோர் பார்த்து கிராமத்திலேயே முறைப்படி திருமணம் செய்து வைத்தனர். ஆனால், திருமணத்திற்குப் பிறகும் அந்தப் பெண்ணின் கவனம் தன்…

1 minute ago

“விஜய் ஓடிப்போகக் காரணம் பயமா?”…. ராகுல் காந்தி வருகையால் உச்சக்கட்ட டென்ஷனில் தயாநிதி மாறன்…. பரபரக்கும் தமிழக அரசியல்…..!

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சென்னை வருகையை முன்னிட்டு, தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர்…

7 minutes ago

அட கொடுமையே… திடீரென சரிந்த இரும்புக் குழாய்கள்… கண்ணிமைக்கும் நேரத்தில் நசுங்கிப் போன உயிர்… ஹைதராபாத்தில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்…!

ஹைதராபாத் பாலநகர் மேம்பாலம் அருகே வியாழக்கிழமை மதியம் 3.30 மணியளவில் சோகமான விபத்து ஒன்று நிகழ்ந்துள்ளது. ஷாபூரிலிருந்து அமீர்பேட்டையிலுள்ள தனது…

27 minutes ago

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

41 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 மணத்தியாலங்கள் ago