இயக்குனர் பிரேம்குமார் விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 திரைப்படத்தை இயக்கினார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆனது. படத்தின் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், நடிப்பு என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதன் பிறகு பிரேம்குமார் படங்கள் எடுக்கவில்லை. நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபல நடிகரான கார்த்தியை வைத்து மெய்யழகன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படம் வருகிற 27-ஆம் தேதி ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. படம் ரிலீஸ் ஆக ஒரு சில நாட்களே இருப்பதால் பட குழுவினர் ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் ஒரு பேட்டியில் அரவிந்த்சாமி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, என்ன பெஸ்ட் கேரக்டராக இருக்கோ அதை தான் நம்ம சூஸ் பண்ணுவோம்.
ஒரு சில நேரத்துல மத்த எந்த ப்ராஜெக்ட் வந்தாலும் அதை விட்டுட்டு ஒரு சில கேரக்டரை கண்டிப்பா பண்ணி ஆகணும் அப்படின்னு உறுதியாக இருப்போம். அந்த மாதிரி எனக்கு இரண்டு கேரக்டர் கிடைத்தது. ஒரு கேரக்டர் நான் விட்டுட்டேன். என்னால அந்த கேரக்டர் பண்ண முடியல. மாநாடு திரைப்படத்துக்கு என்கிட்ட வந்து கேட்டாங்க. ஒரு மாசம் என்னால கால்ஷீட் கொடுக்க முடியல.
அந்த டேட் ஒரு மாசம் தள்ளி வந்துச்சு. ஆனா பட குழுவால் வெயிட் பண்ண முடியல. அத நான் மதிக்கிறேன். இப்ப வரைக்கும் நான் அந்த படம் பாக்கல. எஸ் ஜே சூர்யா நடித்த கேரக்டர். அந்த கேரக்டருக்குள்ள நான் முழுசா இறங்கிட்டேன். வேற மாதிரி அதை பார்க்க முடியல. அதனால இப்ப வரைக்கும் படம் பார்க்கல. இனிமேல் தான் பார்க்கணும். அதே மாதிரி தான் மெய்யழகன் படத்தில் என்னோட கேரக்டர் அவ்வளவு அழகா இருக்கும் என கூறியுள்ளார்.