தென்மேற்கு வங்க கடலில் நிலை கொண்டிருந்த மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. பலத்த காற்று மற்றும் தொடர் கனமழை காரணமாக சென்னையில் வசித்து வந்த மக்கள் பலரும் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் கான்கிரீட் வீடுகள் மற்றும் அப்பார்ட்மெண்ட் வீடுகளிலும் மழை நீர் புகுந்ததால் பலரும் சிக்கிக் கொண்டனர். இவர்களுக்கு அரசு பல உதவிகளை செய்து வரும் நிலையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் உணவு மற்றும் குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் மக்கள் தவித்து வருவதால் அறந்தாங்கி நிஷா சென்னை மக்களுக்கு உதவ திருச்சியில் இருந்து முன்வந்துள்ளார். ஆயிரம் பேருக்கு உணவு வழங்குவதற்கு தாம்பரத்தில் ஏற்பாடு செய்துள்ள நிஷா மக்களுக்கு உணவு தருவதற்கு வாகனங்களை வாடகைக்கு தர யாருமே முன்வரவில்லை என்று வருத்தத்துடன் ஒரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
பல இடங்களில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும் தங்களால் முடிந்த உதவிகளை சென்னை மக்களுக்காக செய்து உதவுங்கள் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார். சென்னையில் யாராவது உதவி என்று கேட்டால் மறுக்காமல் தயவு செய்து செய்யுங்கள் என நிஷா உருக்கமாக பேசியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க
