#image_title
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். சமீபத்தில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படமும் விமர்சன ரீதியிலும், வசூல் ரீதியிலும் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்பொழுது தனது 50 வது படமான ராயன் படத்தின் பணிகளில் தனது முழுக்கவனத்தையும் செலுத்தி வருகிறார் தனுஷ்.
இந்தப் படத்தை தனுஷே இயக்கி, நடித்து வருகிறார். சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தை தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் ராயன் படத்திற்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தில் துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், செல்வராகவன், எஸ்.ஜே. சூர்யா போன்ற முக்கிய நடிகர்கள் நடித்து வருகின்றனர். இத்திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி நடிகர் தனுஷ் நடிப்பை தாண்டி தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர், இயக்குனர் என பன்முகத் திறமைகளை கொண்டு திரையுலகில் வலம் வந்து கொண்டுள்ளார். ராயன் படத்திற்கு இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைப்பதாக நாம் ஏற்கெனவே பார்த்தோம். பொதுவாக ஏஆர் ரகுமான் படத்திற்கு இசையமைப்பதோடு நிறுத்திக் கொள்வார். எந்த ஒரு படத்தின் சூட்டிங் ஸ்பாட்டிற்கும் நேரடியாக கலந்து கொண்டது கிடையாதாம்.
ஆனால் தனுஷ் இயக்கும் ‘ராயன்’ படத்தின் பேக்ரவுண்ட் மியூசிக் அமைக்கும் போது இம்ப்ரஸ் ஆன அவர், அவ்வப்பொழுது படப்பிடிப்பை நேரில் சென்று கண்டு ரசித்து வருகிறாராம். இத்தகவலை அறிந்த ரசிகர்கள் ‘பின்ன சும்மாவா நடிப்பு அசுரன் இயக்கி நடிக்கும் படமில்லையா..? அப்படித்தாங்க இருக்கும்’ என்று கூறி வருகின்றனர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…
இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…
இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…
தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…
கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…
ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…