தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஏ.ஆர் ரகுமான். ஆஸ்கார் விருது பெற்ற பெருமைக்குரியவர். இவர் கடந்த 1995 ஆம் ஆண்டு சாய்ரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு கதீஜா மற்றும் ரஹிமா என்ற இரண்டு மகள்களும், அமீன் என்ற ஒரு மகனும் உள்ளனர். இதில் மகன் இசையமைப்பாளராக முயற்சி மேற்கொண்டு வருகின்றார். சமீப காலமாகவே தன்னுடைய அப்பாவுடன் பல மேடைகளில் தோன்றி வருகிறார். இப்படியான நிலையில் ஏ ஆர் ரகுமானிடம் இருந்து பிரிவதாக அவருடைய மனைவி சாய்ரா பானு அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

சாய்ரா பானு தன்னுடைய கணவர் ஏ ஆர் ரகுமானை பிரிவதாக அவருடைய வழக்கறிஞர் சார்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், திருமணமாகி பல வருடங்கள் கழித்து சாய்ரா பானு தனது கணவர் ஏ.ஆர் ரகுமானை விட்டு பிரியும் கடினமான முடிவை எடுத்துள்ளார். இருவருக்குமான இடைவேளியை தொடர்ந்து வழி மற்றும் வேதனையும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அவர்களின் 29 ஆண்டு கால திருமண வாழ்க்கை தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் தான் மனைவியின் இந்த விவாகரத்து அறிக்கைக்கு பிறகு மன வேதனையோடு ஏ.ஆர் ரஹ்மான் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், நாங்கள் 30 ஆண்டுகளை கடப்போம் என்று நம்பினோம். ஆனால் எல்லாமே கண்ணுக்கு தெரியாத முடிவாகத் தான் தெரிகிறது. கடவுளின் சிம்மாசனம் கூட உடைந்த இதயங்களின் கனத்தில் நடுங்க கூடும். இந்த சிதைவில் இன்னும் சில துண்டுகள் மீண்டும் தங்கள் இடத்தை கண்டுபிடிக்கவில்லை என்றாலும் கூட அதற்கான அர்த்தத்தை தேடுகிறோம். நண்பர்களுக்கு, இந்த பலவீனமான அத்தியாத்தை கடந்து செல்லும் போது உங்களது அன்புக்கும், எங்களது தனியுரிமைக்கும் மதிப்பளித்ததற்கு நன்றி என்று கூறியுள்ளார்.
“We had hoped to reach the grand thirty, but all things, it seems, carry an unseen end. Even the throne of God might tremble at the weight of broken hearts. Yet, in this shattering, we seek meaning, though the pieces may not find their place again. To our friends, thank you for…
— A.R.Rahman (@arrahman) November 19, 2024
