நான் என்ன பன்றேன்னு மத்தவங்க ஏன் வருத்தப்படணும் ; தெளிவாக கேட்ட ஏ.ஆர்.ரஹ்மான் மகள்

By Deepika

Updated on:

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய முட்டைஹல் படத்துக்கே தேசிய விருது வென்றவர். உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கரை இந்தியாவுக்கு வென்று வந்தவர். அப்படிப்பட்ட இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தன்னுடைய இசையில் நம்மை 30 வருடங்களுக்கு மேல் கட்டிபோட்டுள்ளார் என்று சொன்னால் அது மிகையல்ல. இவரைப் போலவே இவர் பெற்ற பிள்ளைகளும் இசையில் ஆர்வம் உள்ளவர்கள்.

AR Rahman family

சாய்ரா பானு என்பவரை 1995 ஆம் ஆண்டு கரம் பிடித்தார் ஏ.ஆர்.ரஹ்மான். இந்த தம்பதிக்கு கதிஜா, ரஹீமா என்ற இரண்டு பெண் குழந்தைகளும், அமீன் என்ற மகனும் உள்ளனர். இதில் அமீன் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். மூத்த மகள் கதிஜா பாடகியாகவும், இசையமைப்பாளராகவும் உள்ளார்.

   
AR Rahman kids

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மூன்று குழந்தைகள் இருந்தாலும், மீடியா அதிகமாக பேசுவது கதீஜாவை தான். கதிஜா திறமை வாய்ந்தவர் இவரின் குரலில் எதோ ஒரு மேஜிக் உள்ளது. ஆனால் இவர் மீடியாவின் வெளிச்சத்தில் இருப்பதற்கு காரணம் இவரின் அடையாளம். கதிஜா பொதுவெளியில் வரும்போது தன முகத்தை பர்தா போட்டு முழுவதுமாக மறைத்தது தான் வருவார்.

Khatija rahman wedding

இவரின் திருமணத்தில் கூட இவர் தன் முகத்தை காட்டவில்லை. இஸ்லாமில் பெண்கள் தங்களை மறைத்து கொள்ள வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது, ஆனால் யாரும் இந்த அளவிற்கு இதை தீவிரமாக பின்பற்றுவதில்லை. கதிஜா ஏன் இப்படி இருக்கிறார் என பலர் கேள்வி எழுப்ப தொடங்கிவிட்டனர். ஆனால் கதிஜா இதையெல்லாம் காதில் வாங்கி கொள்வதாக தெரியவில்லை.

Khatija rahman about her identity

சமீபத்தில் பேட்டியில் கலந்துகொண்ட கதிஜாவிடம் இதுபற்றி கேட்கப்பட்டது. அதற்கு அழகான பதில் ஒன்றை அளித்துள்ளார் கதிஜா. அவர் கூறுகையில், எனக்கு இப்படி இருக்க பிடித்துள்ளது. நான் என் மதத்தை பின்பற்றுகிறேன். யாரும் எனக்கு இப்படி இருக்க சொல்லவில்லை, இது என் முடிவு. பலரும் சொன்னார்கள், நீ காலேஜ் போனால் இந்த் எண்ணம் போய்விடும் என்று, ஆனால் நான் அங்கு சென்ற பின்பும் கூட இப்படித்தான் இருந்தேன்.

என்னை கூறு கூறுபவர்களால் இப்படி இருக்க முடியவில்லை, அதனால் தான் இப்படி பேசுகிறார்கள். நான் எப்படி இருக்கிறேன் என ஏன் மற்றவர்கள் கவலைப்பட வேண்டும் என அழகான பதில் ஒன்றை கொடுத்துள்ளார் கதிஜா ரஹ்மான்.

author avatar
Deepika