Music composer AR Rahman

அப்போது நோன்பில் இருந்தேன்… அழுதுவிட்டேன் – ஓபன் ஸ்டேட்மென்ட் தந்த இசைப்புயல் ஏஆர் ரகுமான்!

By Elango on மாசி 15, 2026

Spread the love

இந்திய அளவில் இசையால் ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் ஏஆர் ரகுமான். இசைப்புயல் என அழைக்கப்படும் அவர் உலகளவில் கொண்டாடப்படும் ஆஸ்கர் விருதுகளை வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பங்கேற்ற இசைப்புயல் ஏஆர் ரகுமான் கூறியதாவது, ஒரு பாடலுக்குள் பல்வேறு உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டி இருந்ததால் அது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது.

மின்சார கனவு என்ற படத்தில் வரும் வெண்ணிலவே வெண்ணிலவே பாடலுக்கு இசையமைக்கும் சமயத்தில் நான் நோன்பில் இருந்தேன். அப்போது தான் அந்த பாடலுக்கான டியூன் எனக்கு வந்தது. அந்த டியூனை வாசித்தபோது நான் அழுது விட்டேன். இதுதான் நான் எதிர்பார்த்த டியூன் என்று அப்போது உணர்ந்தேன் என்று இசைப்புயல் ஏஆர் ரகுமான் அதில் கூறியிருக்கிறார்.