ஏ.ஆர்.ரஹ்மானால் பணத்தை இழந்த ரசிகர்கள்…. கதறி அழுது, மயங்கி விழுந்ததால் பரபரப்பு…. ஷாக்கிங் வீடியோ…!!

By admin on புரட்டாதி 11, 2023

Spread the love

பிரபல இசையமைப்பாளர்களான ஏ.ஆர் ரகுமான், அனிருத் உள்பட சிலர் வாரத்தின் கடைசி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கச்சேரிகள் நடத்தி வருகின்றனர். நேற்று ஏ.ஆர் ரகுமான் சென்னையில் நடத்திய கச்சேரியில் பல அதிர்ச்சிக்குரிய விஷயங்கள் நடைபெற்றுள்ளது.

   

இந்நிலையில் கச்சேரிக்கு மொத்தமாகவே 35 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கிட்டத்தட்ட 2 முதல் 3 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதால் கச்சேரி நடைபெறும் இடத்தில் பெரும் குழப்பமும், சலசலப்பும் ஏற்பட்டுள்ளது.

   

 

முக்கியமாக கோல்டு டிக்கெட் 2000 ரூபாயும், பிளாட்டினம், டைமண்ட் போன்ற டிக்கெட்டுகளின் விலை 5 ஆயிரம் ரூபாய்க்கு மேலும் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால் யார் யாரிடம் எந்தெந்த டிக்கெட்டுகள் இருக்கிறது என்பதை கவனிக்காமல் 35 ஆயிரம் பேரை மட்டும் உள்ளே அனுமதித்ததால் மற்றவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அதிக விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் கடும் கோபமடைந்தனர்.

இந்நிலையில் கச்சேரி நடந்து கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக சிலர் அழுது மயங்கி விழுந்தனர். ஏ.ஆர் ரகுமான் கச்சேரியில் கலந்து கொள்ள ஆர்வமாக வந்தோம். ஆனால் இப்படி ஏமாற்றி விட்டார்களே என ரசிகர்கள் கோபத்துடன் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Cinema Vikatan (@cinemavikatan)