12 வருடமா பல இசை அமைப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட வைரமுத்துவின் பாடல்.. 10 நிமிடத்தில் இசையமைத்த AR. ரஹ்மான்.. இந்தப் பாடலா..?

By Archana

Published on:

பொதுவாக ஒரு இயக்குநர், ஒரு நடிகருடன் இணைந்து ஒரு படம் எடுத்து அந்தப் படம் வெற்றி அடைந்து விட்டால் அந்த காம்போ எப்போதும் மறுபடியும் சேர்ந்து படம் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அதேப் போல சில கவிஞர்களின் வரிக்கு ஒரு சிலர் இசையமைக்கும் போது அந்த பாடல் மிகப்பெரிய ஹிட் அடிக்கும். அப்படியான ஒரு காம்போ என்றால் தமிழ் சினிமாவில் வைரமுத்து-ஏ.ஆர்.ரகுமான் காம்போ. வைரமுத்துவின் எழுத்துகளுக்கு தனது இசையின் மூலம் உயிர் கொடுப்பார் ஏ.ஆர்.ரகுமான். அதனால் தான் இவர்கள் இருவரும் சேரும் படங்களில் படம் வெற்றி அடைகிறதோ இல்லையோ பாடல்கள் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.

865768 78796 qvqixmocse 1516811483

அப்படி 1993-ம் ஆண்டு வெளியான புதிய முகம் படமும். இந்தப் படம் தோல்வியை சந்தித்திருந்தாலும், இப்படத்தில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. சுரேஷ் மேனன் இயக்கி நடித்திருந்த இந்த படத்தில் ரேவதி, வினீத், கஸ்தூரி உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தில், இடம் பெற்ற பாடல்கள் அனைத்தும் ஏ.ஆர்.ரகுமானின் சிறந்த ஆல்பங்களில் ஒன்று. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற கண்ணுக்கு மை அழகு பாடல் பெண்களுக்கு மிகவும் பிடித்த பாடல்.

   
62115450

இப்பாடல் இப்படத்திற்கு முன்பு கிட்டத்தட்ட 12 முறை நிராகரிக்கப்பட்டு உள்ளதாம். கண்னுக்கு மை அழகு பாடலை எழுதி 12 ஆண்டுகளாக வைத்திருந்துள்ளார் வைரமுத்து. எம்.எஸ்.விஸ்வநாதன், சங்கர் கணேஷ், ஷ்யாம், ஹம்சலேகா மட்டுமின்றி வட இந்திய இசைக்குழுவுக்கு அனுப்பிக் கூட நிராகரிக்கப்பட்டுள்ளது. ஒரு முறை சுரேஷ் மேனன், புதிய முகம் படத்திற்கு பாட்டெழுதி தருமாறு கேட்க அந்தப் பாடலை ஏ.ஆர்.ரகுமானிடம் கொடுத்துள்ளார் வைரமுத்து. இந்தப் பாடலை வாங்கி படித்து 10 நிமிடத்திற்குள் ஏ.ஆர். இசையமைத்து விட்டாராம். இந்த தகவலை வைரமுத்துவே ஒரு நேர்காணலில் கூறியிருக்கிறார்.

ad2e72 d2fc7782c43d46d1a3a265a712039bb3~mv2
author avatar
Archana