தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்தம் 5.67 கோடி வாக்காளர்கள் இருந்தனர். வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விடுபட்ட தகுதியுள்ள வாக்காளர்கள் தங்களை இணைத்துக்கொள்ள மார்ச் 26-ஆம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கப்பட்டது. இந்தத் தொடர் திருத்தக் காலத்தில், தமிழகம் முழுவதிலும் இருந்து சுமார் 6,48,285 பேர் பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை (3,58,500) ஆண்களை விட (2,89,581) அதிகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது; மேலும் 204 மூன்றாம் பாலினத்தவர்களும் விண்ணப்பித்துள்ளனர்.
மார்ச் 26 வரை பெறப்பட்ட இந்த அனைத்து விண்ணப்பங்களும் தற்போது தீவிரப் பரிசீலனையில் உள்ளன. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளான ஏப்ரல் 6-ஆம் தேதியன்று உள்ள நிலவரப்படி, இந்தத் தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவரும் புதிய வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இந்த முறை சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தங்கள் எனத் தனித்தனிப் பட்டியல்கள் வெளியிடப்படாது. மாறாக, அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய ஒரே ஒருங்கிணைந்த பட்டியலே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு வழங்கப்பட உள்ளது.
இந்தத் தேர்தலுக்காக மாநிலம் முழுவதும் சுமார் 75,032 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு வாக்குச் சாவடியில் அதிகபட்சமாக 1,200 வாக்காளர்கள் மட்டுமே வாக்களிக்கும் வகையில் சீரமைப்புப் பணிகள் செய்யப்பட்டுள்ளன. ஏப்ரல் 6-ஆம் தேதி முழுமையான பட்டியல் தயாரானவுடன், வாக்காளர்கள் தங்கள் பெயர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைத் தேர்தல் ஆணையத்தின் இணையதளம் வழியாக உறுதி செய்துகொள்ளலாம். இதற்கிடையே, மார்ச் 30 முதல் வேட்புமனு தாக்கல் தொடங்க உள்ளதால் தமிழக தேர்தல் களம் விறுவிறுப்படைந்துள்ளது.
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…