“3,769 கோவில்களுக்கு புதிய அறங்காவலர்கள்”…. உடனே அப்ளை பண்ணுங்க…. செப்டம்பர் 18 கடைசி நாள்…. தமிழக அரசு அறிவிப்பு….!

By Nanthini on ஆவணி 19, 2026

Spread the love

தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் கோயில்களுக்குப் புதிய பரம்பரை முறைசாரா அறங்காவலர்களை நியமிக்கும் பணியைத் தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம், திருச்சி, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள 3,769 திருக்கோயில்களுக்கு அறங்காவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர். இதில் சட்டப்பிரிவு 46(ii)-ன் கீழ் 39 கோயில்களும், சட்டப்பிரிவு 46(i)-ன் கீழ் 267 கோயில்களும், சட்டப்பிரிவு 49(1)-ன் கீழ் 3,463 கோயில்களும் அடங்கும். திருக்கோயில் பராமரிப்பு மற்றும் கும்பாபிஷேகப் பணிகளைச் சீராக மேற்கொள்வதற்காகத் தகுதியுள்ள நபர்களிடமிருந்து தற்போது விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அறநிலையத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.hrce.tn.gov.in வாயிலாக விண்ணப்பப் படிவங்கள், தேவையான தகுதிகள் மற்றும் கோயில்களின் விவரங்களைப் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை இணைய வழியிலேயே பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் அல்லது படிவத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்தும் அனுப்பலாம். அஞ்சல் வழியாகவோ அல்லது நேரடியாகவோ விண்ணப்பிப்பவர்கள், உரிய ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட இணை ஆணையர் அல்லது உதவி ஆணையர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 18.09.2026 மாலை 5.45 மணி ஆகும்.

   

இந்த நியமனம் குறித்துத் தெளிவுபடுத்தியுள்ள அறநிலையத்துறை, இது அரசு வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு அல்ல என்பதைக் சுட்டிக்காட்டியுள்ளது. கோயில்களின் சிறந்த நிர்வாகம், வழிபாட்டு முறைகள் சீராக நடைபெறுதல் மற்றும் ஆன்மீகப் பணிகளைச் செவ்வனே மேற்கொள்வதற்காகவே இந்த அறங்காவலர்கள் நியமிக்கப்படுகின்றனர். ஆன்மீக ஈடுபாடும் தகுதியும் கொண்ட பக்தர்கள் இப் வாய்ப்பைப் பயன்படுத்தி உரிய நேரத்திற்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.