தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் கருணாஸ். இவர் நடிகர் மட்டுமல்ல .ஒரு இசையமைப்பாளரும் கூட. அது மட்டும் இல்லாமல் இவர் தமிழக அரசியலிலும் களமிறங்கி கலக்கியவர். சூர்யா நடிப்பில் வெளிவந்த ‘நந்தா’ படத்தில் ‘லொடுக்கு பாண்டி’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் தான் கருணாஸ் சினிமா உலகில் அறிமுகமானார். இத்திரைப்படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது .
இதைத் தொடர்ந்து வில்லன், புதிய கீதை ,திருமலை, குத்து, பிதாமகன், திருடா திருடி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். மேலும் திண்டுக்கல் சாரதி, அம்பாசமுத்திரம் அம்பானி, சாந்த மாமா போன்ற திரைப்படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்பொழுது இவர் பல்வேறு திரைப்படங்களில் கமிட்டாகி குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.
கருணாஸ் பாடகி கிரேஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கிரேஸ் சினிமாவில் பாடியுள்ளார். இவர் அதிகம் தன் கணவர் நடித்த படங்களில் தான் பாடியிருக்கிறார். பின் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி நிறைவடைந்த ‘கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ்’ காமெடி நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார்.
நடிகர் கருணாஸ் -கிரேஸ் தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர். நடிகர் கருணாஸ் சினிமாவில் மட்டுமின்றி ‘முக்குலத்தோர் புலிப்படை’ என்னும் கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் கால்பதித்தார். 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் கூட்டணி வைத்த இவர், திருவாடனை தொகுதியில் வெற்றி பெற்று எம்எல்ஏ ஆனார். இப்படி சினிமா, அரசியல் மட்டுமில்லாமல் சொந்த தொழிலும் அதிக லாபம் ஈட்டி வருகிறார்.
நடிகர் கருணாஸ் திண்டுக்கல் மாவட்டத்தில் ரத்தினவிலாஸ் என்னும் பெயரில் ஹோட்டல் பிசினஸ் நடத்தி வருகிறார். இந்திய மற்றும் சைனீஸ் உணவு வகைகள் இங்கு வழங்கப்படுகிறது. மெயின் இடத்தில் அமைந்து இருப்பதால் இங்கு எப்போதும் கூட்டம் காணப்படுகிறது. இந்த ஹோட்டலில் சைவ மற்றும் அசைவ சாப்பாடுகள் , சைனீஸ் உணவு வகைகளான நூடுல்ஸ் மற்றும் ப்ரைடு ரைஸ் முதல் கோழிச்சாரு, நெஞ்செலும்பு பிரட்டல், உப்புக்கரி என தரமான அசைவ உணவு வகைகளும் உள்ளது. இந்த ஹோட்டல் பிசினஸ் மூலம் மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறாராம் நடிகர் கருணாஸ்.