BREAKING: இபிஎஸ்-க்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி.. திமுகவில் இணைந்ததும் அதிமுக பிரபலத்துக்கு கிடைத்த முக்கிய பதவி… அதிரடி காட்டும் ஸ்டாலின்…!

By Nanthini on ஆவணி 9, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. ஒரு பக்கம் தங்களுடைய கூட்டணியை பலமாக வைத்துக் கொண்டு இந்த முறையும் திமுக ஆட்சியை தமிழகத்தில் நிலைநாட்ட முதல்வர் ஸ்டாலின் அதற்கான வேலைகளை செய்து கொண்டிருக்கின்றார். மறுபக்கம் பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த முறை எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

அதிமுகவில் நீக்கம்! அறிவாலயத்தில் அன்வர் ராஜா! - அதிமுக மீது கடும்  விமர்சனம்!

   

இதனிடையே அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்த திமுகவில் இணைந்து வரும் நிலையில் அதிமுகவிற்கு இது பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அப்படி சமீபத்தில் அன்வர் ராஜா அதிமுகவிலிருந்து விலகி திமுகவில் ஐக்கியமானார். கட்சியில் இணைந்து ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் அவருக்கு மிக முக்கிய பொறுப்பை முதல்வர் ஸ்டாலின் கொடுத்துள்ளார். அதாவது திமுகவின் இலக்கிய அணி தலைவராக அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் இஸ்லாமிய சமூக வாக்குகளை கருத்தில் கொண்டு அவருக்கு 2026 ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது