விஜய் சேதுபதி நடித்த இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் வில்லனாக நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் அனுராக் காஷ்யப். அவ்வப்போது தமிழ் திரைப்படங்களில் சிறப்பு தோற்றத்தில் இவர் நடித்து வருகின்றார். அண்மையில் வெளியான விஜய் சேதுபதியின் மகாராஜா திரைப்படத்திலும் இவர் வில்லனாக நடித்திருந்தார். இந்த நிலையில் இசையமைப்பாளராக கவனம் ஈர்த்து நடிகராகவும் தற்போது கவனம் இருந்து வரும் ஜிவி பிரகாஷ், அனுராக் காஷ்யப் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

கிங்ஸ்டன் படத்திற்குப் பிறகு இயக்குனர் அனுராக் திரைப்படத்தில் ஹீரோவாக நடிக்க போகிறேன் எனவும் தான் வாய்ப்பு கேட்டு செல்லவில்லை அவரே என்னை தொடர்பு கொண்டு இது குறித்து பேசினார், இருவரும் அந்த படத்திற்கான பேச்சுவார்த்தையில் இருக்கிறோம் விரைவில் அவர் இயக்கத்தில் நடிக்கப் போகிறேன் என்று ஜிவி பிரகாஷ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் கூறி இருந்தார்.

இந்த படத்திற்கான முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றன. தற்போது அனுராக் மற்றும் ஜிவி பிரகாஷ் கூட்டணியில் உருவாக உள்ள திரைப்படத்தின் திரைக்கதை படிகள் நிறைவடைந்து படப்பிடிப்புக்கு தயாராகிவிட்டது. இந்த கதையை திரைப்படமாக தமிழ் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கலாம் என்று திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இதனை 8 எபிசோடு கொண்ட திரில்லர் வெப் சீரிஸ் ஆக எடுக்க அனுராக் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதற்கான பணிகள் தற்போது தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
