அடுத்தடுத்து சிக்கும் திமுக புள்ளிகள்..! எ.வ.வேலு தொடர்புடைய கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை… தமிழக அரசியலில் பரபரப்பு..!!

Spread the love

திருவண்ணாமலை மாவட்டம் தென்மாத்தூரில் அமைந்துள்ள, தமிழக முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவுக்குத் தொடர்புடைய அருணை பொறியியல் கல்லூரியில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இன்று காலை 7.30 மணி முதலே கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த அதிகாரிகள், அங்குள்ள முக்கிய அலுவலகங்கள் மற்றும் நிர்வாகப் பிரிவுகளில் தங்களது சோதனையைத் துவங்கினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த விவகாரம் அல்லது நிதி முறைகேடுகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான மற்றும் தொடர்புடைய கல்வி நிறுவனத்தில் காலை முதலே லஞ்ச ஒழிப்புத்துறையினர் முகாமிட்டு தீவிர ஆவணச் சரிபார்ப்பில் ஈடுபட்டு வருவது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாதுகாப்புப் பணிக்காகக் கல்லூரி வளாகத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். இந்தச் சோதனையின் நிறைவிலேயே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் முக்கிய விவரங்கள் குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பிலிருந்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Soundarya

Recent Posts

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து ரேஷன் கார்டுக்கும்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…. உடனே கிளம்புங்க…..!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களின் இ-கேஒய்சி (eKYC) சரிபார்ப்புப் பணிகளை 100 சதவீதம் நிறைவு செய்யும் நோக்கில், இன்று (செப்டம்பர் 19)…

5 minutes ago

ஒரு MLA-வுக்கு ரூ.35 கோடியா?…. தவெக பற்றி பொள்ளாச்சி ஜெயராமன் போட்ட பகிரங்கக் குண்டு… அரசியல் வட்டாரத்தில் பூகம்பம்….!

அதிமுகவிலிருந்து விலகி மாற்று முகாமிற்குச் சென்ற சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தலா ரூ.35 கோடி வரை கொடுக்கப்பட்டதாக முன்னாள் பேரவைத் துணைத்…

11 minutes ago

பரபரக்கும் தமிழக அரசியல்…. ‘தி மிசா மார்க்’ ரிலீஸ் தேதி பிக்ஸ்… உதயநிதி போட்ட ஸ்கெட்ச்…. விஜய்க்கு திமுகவின் அதிரடி பதிலடி….!

தமிழக முதல்வர் விஜய்யின் மிசா குறித்த பேச்சுக்கு அரசியல் ரீதியாகப் பதிலடி கொடுக்கும் வகையில், 'தி மிசா மார்க்' என்ற…

15 minutes ago

ஐயோ… 20 வருஷம் சிறை… கடைசியில தேநீர் கடையிலயா?… நிதாரி வழக்கு சுரேந்தர் கோலியின் விபரீத முடிவு… அதிர்ச்சி பின்னணி…!

நாட்டின் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிதாரி தொடர் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேந்தர் கோலி, ஹரித்வாரின் பூபத்வாலா பகுதியில்…

51 minutes ago

அடேங்கப்பா…! இத்தனை கோடி விலையா…? சொகுசு காரில் வந்து இறங்கி நெட்டிசன்களை மிரள வைத்த பாடகி… இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் வீடியோ…!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏவும் பிரபல இளம் பாடகியுமான மைதிலி தாகூர், மும்பையின் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர்…

52 minutes ago