தமிழ் சினிமாவில் முன்னாடி நடிகர்களில் ஒருவராக சொல்லிக் கொண்டிருக்கும் நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அதற்கான வேலைகளில் மும்முரம் காட்டி வருகின்றார். இப்படியான நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விஜயின் மேலாளர் ஜெகதீஷின் அலுவலகத்தில் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது கணவருடன் கலந்து கொண்டார். கூடவே நடிகர் விஜய், கல்யாணி பிரியதர்ஷன், நமீதா பைஜூ மற்றும் கதிர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியான நிலையில் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது நேரில் சென்று பார்க்கவில்லை, கட்சிகள் நிர்வாகிகள் இடையே பிரச்சனை இருக்கும் நிலையில் விஜய் கீர்த்தி சுரேஷுடன் பொங்கல் கொண்டாடுவது முக்கியமா என்று நெட்டிசன்கள் விளாசி வருகிறார்கள். இப்படியான நிலையில் இந்த விவாகாரம் குறித்து பேசி உள்ள வலைப்பேச்சு அந்தணன், விஜயின் இந்த செயலுக்கு மக்கள் கேள்வி கேட்க தான் செய்வார்கள். அனைவரும் குடும்பத்தோடு தான் பொங்கல் கொண்டாடுவார்கள். யாரும் மற்றவர்களின் வீட்டிற்குச் சென்று பொங்கல் கொண்டாட மாட்டார்கள்.

இதற்கு மக்கள் கேட்கும் கேள்விக்கு விஜய் பதில் சொல்லி தான் ஆக வேண்டும். ஆனால் அவர் பதில் சொல்ல மாட்டார். இருந்தாலும் இந்த கேள்வி இணையத்தின் மூலம் கேட்கப்படுகிறது என்பதை யாவது விஜய்க்கு தெரிய வேண்டும். விஜய் மிகப்பெரிய அரசியல் கட்சி தலைவராக இருக்கின்றார். சமீபத்தில் கூட மாவட்ட செயலாளர்களின் கூட்டம் நடைபெற்ற நிலையில் மாவட்ட செயலாளர்களுடன் விஜய் இந்த பொங்கலை கொண்டாடிய இருந்தார் என்றால் மிகப்பெரிய அளவில் அவர் பேசப்பட்டு இருப்பார். ஒரு அரசியல் தலைவராக மாறிய பிறகு வரும் முதல் பொங்கல் இது என்பதால் விஜய் தொண்டர்களுடன் உங்களை கொண்டாடி இருக்க வேண்டுமே தவிர கீர்த்தி சுரேஷ் உடன் தல பொங்கலை கொண்டாடி இருக்கக்கூடாது.

நடிகராக இருந்தாலும் சரி ஒரு அரசியல் கட்சி தலைவராக இருந்தாலும் சரி அதற்கு இமேஜ் என்பது முக்கியம். இன்று ஒரு கேள்வி கேட்கப்படும் நிலையில் நாளை பல்லாயிரம் கேள்விகளாக அது மாறலாம். பின்னாளில் இதுவே விஜய்க்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். விஜய்க்கு இந்த விஷயம் எல்லாம் தெரியுமா இல்லை தெரிந்தும் கண்டும் காணாமல் இருக்கிறாரா என்பது தெரியவில்லை. அவருக்கு அறிவுரை கூறுபவர்கள் இந்த பொங்கலுக்கு செல்ல வேண்டாம் என்று கூறி அவரை தடுத்து நிறுத்தி இருக்கலாம். கீர்த்தி சுரேஷ் திருமணத்திற்கு சென்றது அவர் நெருங்கிய தோழி என்பதற்காக ஒருவகையில் ஏற்றுக் கொள்ள முடிகிறது. ஆனால் தல பொங்கலுக்கு செல்வது என்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாது என்று விஜய்யை குறிப்பிட்ட அந்த நன் பேசி உள்ளார்.
