விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்லம்மா என்ற சீரியலில் நடித்த பிரபலமானவர் அன்சிதா. இதில் இவருக்கு ஜோடியாக அர்னவ் நடித்திருந்தார். அந்த சீரியலில் நடித்த போது இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தது. அர்னவ் ஏற்கனவே திருமணம் ஆகி அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதரும் ஒரு சீரியல் நடிகை தான். இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தற்போது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
இதற்கு இடையில் அன்சிதா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார். இருவருமே போட்டியாளர்களாக கலந்து கொண்ட நிலையில் இரண்டாவது வாரத்திலேயே எலிமேட் ஆகி வெளியேறினார் அர்னவ். அதன் பிறகு அன்சிதாவிற்கு சகப் போட்டியாளர் விஷால் மீது கிரிஷ் ஏற்பட்டது. இருவரும் காதலிப்பதாக பரவலாக பேசப்பட்டு வந்தது. ஆனால் அன்சிதா அதை திட்டவட்டமாக மறுத்தார்.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்ததும் அன்சிதாவுக்கு மற்றுமொரு பிரம்மாண்டமான வாய்ப்பு வழங்கியிருக்கிறது விஜய் டிவி. அதாவது விரைவில் தொடங்க உள்ள ஜோடி ஆர் யூ ரெடி என்ற நடன நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனில் அன்சிதா போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
அந்த நிகழ்ச்சி மூலம் தன்னுடைய நடன திறமையை காட்ட இருக்கும் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் வருகிறது. இந்த நிகழ்ச்சியை ரியோ மற்றும் ஏஞ்சலின் தொகுத்து வழங்க இருக்கிறார்கள். பிக் பாஸ் முடிந்த நிலையில் பிக் பாஸ் ரசிகர்களுக்கு விருந்தாக இந்த ஜோடி ஆர் யூ ரெடி நிகழ்ச்சி அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பெலகாவியில் உள்ள ஜோதி நகரில் வசித்து வந்த 28 வயதான ஸ்ரீநிதி என்ற இளம் தாய், வரதட்சணை கொடுமை மற்றும்…
கர்நாடக மாநிலம் பெலகாவியில், மனைவி அணிந்திருந்த ஆடையின் காரணமாக ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியைத் தீயிட்டுக் கொளுத்திய கொடூரச் சம்பவம்…
கர்நாடக மாநிலம் ராய்ச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றும் மெகபூப் என்ற இளைஞர், சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதாகக்…
நடிகர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு…
இங்கிலாந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த "புகையிலை மற்றும் வேப்ஸ் மசோதா" (Tobacco and Vapes Bill), ஜனவரி…
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் பதற்றமான சூழலில், ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பகுதியில் ஈரான் நடத்தியுள்ள…