பிரியங்கா கொடுத்த அட்வைஸ்.. நான் பிரேக் அப் செய்ய காரணம் அது தான்.. உண்மையை போட்டுடைத்த அன்ஷிதா..!

By Nanthini on தை 25, 2025

Spread the love

பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் இந்த சீசனில் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் தேர்வு செய்யப்பட்டார். சௌந்தர்யா இரண்டாவது இடம் பிடித்தார். மூன்றாவது இடத்தை விஷால் பிடித்தார். போட்டியாளர் விஷாலும் அன்ஷிதாவும் காதலிப்பதாக ஒரு பேச்சு ரசிகர்கள் மத்தியில் உலா வருகின்றது. இப்படியான நிலையில் பிக் பாஸ் பினாலே மேடையில் அன்ஷிதா தான் ஏற்கனவே காதலித்து வந்த நபரை பிரேக் அப் செய்து விட்டதாக கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவியது. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு நான் அந்த நபரிடம் எப்போதும் கெஞ்சிக் கொண்டுதான் இருப்பேன். ஆனால் பிக் பாஸ் வீடு எனக்கு நம்பிக்கை கொடுத்து உள்ளது. அந்த நபர் இனிமேல் என்னுடைய வாழ்க்கையில் தேவையில்லை என்ற மனநிலையை கொடுத்தது.

   

எனவே நான் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் அந்த நபரின் வீட்டுக்கு சென்று இனிமேல் நீ என்னுடைய வாழ்க்கையில் இல்லை, நீ எனக்கு வேண்டவே வேண்டாம் என்று கூறிவிட்டேன் என கூறினார். இது பலருடைய கவனத்தையும் ஈர்த்த நிலையில் அன்ஷிதா தற்போது அளித்துள்ள பேட்டியில், தன்னுடைய பிரேக் அப் காரணத்தை கூறியுள்ளார். நான் பாசத்திற்கு ஏங்குபவள். அதனால அந்த நபரிடம் நான் முதலில் அன்புக்காக பலமுறை கெஞ்சி உள்ளேன். ஆனால் காதல் யாரையும் கெஞ்ச வைக்காது, கெஞ்ச வைத்தால் அது காதலாக இருக்காது, நான் அப்போது என்னை நேசிக்காமல் இருந்து விட்டேன் என்று நன்றாக புரிந்து கொண்டேன். ஆனால் இப்போது நான் என்னை மிகவும் நேசிக்கிறேன்.

   

பிரியங்கா கொடுத்த அறிவுரை.. பிரேக் அப் செய்ய காரணமே அதுதான்.. பிக்பாஸ்  அன்ஷிதா கொடுத்த தரமான விளக்கம் | Bigg Boss 8 Tamil Anshidha Opens About Her  Breakup And Priyanka ...

 

ஒருமுறை பிரியங்கா அக்கா என்னிடம் ஒரு விஷயத்தை சொன்னார். ஆனால் அப்போது அவருக்கு எனது சொந்த வாழ்க்கையில் என்ன நடந்து கொண்டிருந்தது என்று தெரியாது. அவர் என்கிட்ட சொன்னது, எப்போது உன்னை எதற்காக விட்டுக் கொடுக்காதே. சுயமரியாதை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காதே என்று கூறினார். பிரியங்கா அக்கா அன்னைக்கு சொன்ன விஷயம், பிக் பாஸ் வீடு எனக்கு கொடுத்த தைரியம், என்னை இறங்கி ஓடு என்கின்றது. நான் அவரை வேண்டாம் என்று முகத்திற்கு நேராக சொன்னேன், சிரித்துக் கொண்டே கூறினேன். பிக் பாஸ் வீடு என்னையே என்னிடம் திருப்பிக் கொடுத்து விட்டது. நான் என்னை பத்திரமாக வைத்துக் கொண்டால் போதும் என அன்சிதா பேசியுள்ளார்.