காரில் சொகுசாக அமர்ந்து உணவருந்திய பெண் ஒருவர், தின்று முடித்ததும் அந்தக் குப்பைகளை அப்படியே நடுரோட்டில் தூக்கி வீசியுள்ளார். இதைக் கவனித்த அருகில் இருந்த இளம்பெண் ஒருவர், உடனடியாகத் தனது செல்போனை எடுத்து அந்தப் பெண்ணின் செயலை வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கார் பெண்ணுக்கும் அந்த இளம்பெண்ணுக்கும் இடையே சாலையில் பெரும் காரசாரமான விவாதம் வெடித்தது.
ஆனாலும் பின்வாங்காத அந்த இளம்பெண், வீசிய குப்பையை மீண்டும் எடுக்க வேண்டும் என்பதில் உறுதியாக நின்றார். இதனால் வேறு வழியின்றி, தான் சாலையில் எறிந்த குப்பையை அந்தப் பெண்ணே கையால் அள்ளித் தனது காரில் போட்டுக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். நாகரிகமற்ற முறையில் நடந்துகொண்ட பெண்ணுக்குச் சமூக வலைத்தளம் வாயிலாகத் தகுந்த பாடம் புகட்டப்பட்ட இந்தச் சம்பவம் இணையத்தில் வேகமாகப் பரவி, நெட்டிசன்களின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
