பிக் பாஸ் சீசன் 6ல் லாஸ்லியாவை தொடர்ந்து நுழையும் மற்றொரு இலங்கை போட்டியாளர் … வெளியான இறுதிப்பட்டியல் உங்களுக்காக…

விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் பிரம்மாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் தற்பொழுது 5 சீசன்கள் முடிந்த நிலையில் 6 வது சீசன் அக்டோபர் 9ம் தேதி தொடங்க உள்ளது. பிரம்மாண்டமாக தொடங்கவிருக்கும் இந்த நிகழ்ச்சியை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார்.

இதில் கலந்து கொள்ளும் பிரபலங்கள் குறித்து பல தகவல்களும் தற்பொழுது இணையத்தில் வெளியாகி வரும் நிலையில் பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்பொழுது அதில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார் என்ற  தகவல்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த வருடம் பிக் பாஸ் வீட்டில் அதிகமான போட்டியாளர்கள் கலந்து கொள்ள இருக்கிறார்கள். எனவே பிக் பாஸ் வீட்டிற்குள் கண்டிப்பாக சண்டைக்கு பஞ்சம் இருக்காது.

இந்த நிகழ்ச்சியை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் 24 மணி நேரமும் ஒளிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 6 ஒரு புதுவித முயற்சி ஆக திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமல்லாமல் பொதுமக்களும் கலந்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியான நிலையில் பலரும் இதற்காக விண்ணப்பித்திருந்தனர்.

தாங்கள் எதற்காக பிக் பாஸிற்குள் வருகிறோம், என்ற தகவலையும் அவர்கள் அந்த வீடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான நபர்கள் வீடியோ அனுப்பி இருந்த நிலையில் தற்பொழுது சிலர் பைனல் செய்யப்பட்டுள்ளனர்.

தற்பொழுது இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டி அவர்கள் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளார்களாம் .இவர்கள் சிலரைப் பற்றி தற்பொழுது நமக்கு தெரிந்துள்ளது. சென்னையைச் சேர்ந்த சூப்பர் மாடல் ஒருவர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இலங்கையில் இருந்து டிக் டாக் பிரபலமான ஜனனி பிக் பாஸ் சீசன் 6 கலந்து கொள்ளப் போகிறார் என்றும் கூறப்படுகிறது. தற்பொழுது அவரின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதோ அந்த புகைப்படம்….