Breaking: அடுத்தடுத்து அதிர்ச்சி..! விஜய் கூட்டத்தில் மேலும் ஒருவர் உயிரிழப்பு..?

Spread the love

சேலத்தில் இன்று (பிப்ரவரி 13, 2026) நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் மற்றும் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் சோகம் நிகழ்ந்துள்ளது. இக்கூட்டத்தில் பங்கேற்ற சூரஜ் (37) என்ற நபர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர், சேலம் செவ்வாய்ப்பேட்டை பகுதியில் வெள்ளி கொலுசு தயாரிக்கும் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தார். கூட்டத்தின் போது திடீரென மயங்கி விழுந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலனின்றி அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், நிகழ்ச்சி நடைபெற்ற சீலநாயக்கன்பட்டி திடல் அருகே அடையாளம் தெரியாத மற்றொரு முதியவரின் சடலமும் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தவிர, சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாகக் கடுமையான வெயிலில் காத்திருந்ததால் 20-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவங்கள் கடந்த ஆண்டு கரூரில் நடைபெற்ற தவெக மாநாட்டின் போது ஏற்பட்ட நெரிசலை மீண்டும் நினைவுபடுத்துவதாக அமைந்தது.
Soundarya

Recent Posts

Real Life Money Heist!… 2 நிமிடத்தில் மாயமான கார்… உள்ளே இருந்த பணம் என்னாச்சு?… CCTV-க்கே தண்ணி காட்டிய பலே திருடர்கள்… நடுங்க வைக்கும் திருட்டு…!!

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், சினிமா பாணியிலான துணிகரக் கொள்ளைச் சம்பவம் ஒன்று அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீட்டின்…

11 minutes ago

16 ஆண்டு அரசியல் கொள்கைக்கு திடீர் செக்?…. சீமானின் ‘பொது வேட்பாளர்’ மாஸ்டர் பிளான்…. இடைத்தேர்தலில் காத்திருக்கும் டுவிஸ்ட்…!

கடந்த 16 ஆண்டுகளாக திராவிடக் கட்சிகளான திமுக மற்றும் அதிமுகவை கொள்கை ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் கடுமையாக விமர்சித்து வந்த…

13 minutes ago

“கோடிக் கணக்கில் கொள்ளையா?…. பெரியார் அறிவுலகமா இல்லை ‘ஊழல் உலகமா”….. உலகமே கைகொட்டிச் சிரிக்கும் பகீர் ஊழல்…. கொதித்தெழுந்த முதல்வர் விஜய்….!

கோவையில் ரூ.300 கோடியில் அமைக்கப்பட்டு கடந்த மாதம் திறக்கப்பட்ட 'பெரியார் அறிவுலகம்' நூலகத்திற்கான புத்தகக் கொள்முதலில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாக…

18 minutes ago

பைக் கேட்டு அடம் பிடித்த மகன்… பறிபோன 20 வயது இளைஞனின் உயிர்…. மொட்டை மாடியில் நடந்தது என்ன?… நடுங்க வைக்கும் உண்மை…!!

கம்மம் நகரில் தனியார் கல்லூரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு பட்டப்படிப்பு படித்து வந்த ஜஸ்வந்த் தேஜா என்ற மாணவர், தனது…

22 minutes ago