“அடப்பாவமே… இவருமா இப்படி?!”… தொடரும் கள்ளக்காதல் சர்ச்சை… ஜென்சன் ஹுவாங்கின் ‘மூன்றாவது காதலி’ யார்?… வெளியான அதிர்ச்சித் தகவல…!!

By Gayathri on கார்த்திகை 13, 2026

Spread the love

செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற ஜென்சன் ஹுவாங், தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சைகளால் தனது தலைமைச் செயல் அதிகாரி பதவியை இழந்துள்ளார். ஏற்கெனவே ‘மெகாஸ்பீட்’ கிளவுட் நிறுவன முன்னாள் நிர்வாகி ஆலிஸ் ஹுவாங் மற்றும் என்விடியாவின் சுகாதாரப் பிரிவு துணைத் தலைவர் கிம்பர்லி ஆகியோருடன் அவருக்குத் திருமணத்தை மீறிய உறவு இருந்ததாகப் புகார்கள் எழுந்த நிலையில், தற்போது மற்றொரு பெண் ஊழியருடனும் அவர் ரகசியத் தொடர்பில் இருந்ததாகத் தகவல்கள் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த விவகாரத்தில் சீன உளவுத்துறையுடன் தொடர்புடையவராகச் சந்தேகிக்கப்படும் ஆலிஸ் ஹுவாங்கின் பங்கு தேசியப் பாதுகாப்பு குறித்த அச்சத்தைத் தூண்டியுள்ளது. அமெரிக்கத் தடைகளை மீறி மூன்றாம் நாடுகள் வழியாகச் சீனாவிற்கு நவீன AI சிப்கள் கடத்தப்பட்டதா என்பது குறித்து அமெரிக்க நீதித்துறையும் சிங்கப்பூர் அரசும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன. இதற்கிடையே, ஜென்சன் ஹுவாங்கிற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், உளவுத் தொடர்பு குறித்து ஹுவாங்கிற்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றும், தற்போதைய நெருக்கடியைச் சமாளிக்க ஆப்பிள் நிறுவனத்தின் முன்னாள் சிஇஓ டிம் குக் என்விடியாவுக்குத் தலைமை ஏற்கலாம் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.

   

ஜென்சன் ஹுவாங்கின் விலகலைத் தொடர்ந்து, என்விடியாவின் நிதி அதிகாரி கோலெட் கிரெஸ் இடைக்காலத் தலைமைச் செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்; நிரந்தரப் பதவிக்கான போட்டியில் மூத்த பொறியாளர் இயன் பக் உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபடுகின்றன. பதவியிலிருந்து விலகிய போதிலும் ஹுவாங்கிற்குச் சிக்கல்கள் தீரவில்லை; சீனாவுடனான வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் ஆலிஸ் ஹுவாங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க நாடாளுமன்ற வெளியுறவுக் குழு முன்பு ஆஜராகி விளக்கமளிக்க அவர் சம்மதித்துள்ளார். இதற்காகப் பிரபல ‘பால் வெயிஸ்’ சட்ட நிறுவனத்தின் உதவியையும் அவர் நாடியுள்ளார்.