Connect with us

CINEMA

இணையத்தில் வெளியான மற்றுமொரு ‘இந்தியன் 2’ படப்பிடிப்பு காட்சி… அதிர்ச்சியில் படக்குழு… வைரலாகும் வீடியோ…

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் இந்தியன் 2 படத்தை இயக்குகிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ்  பெரும் பொருட்செலவில் இந்த படத்தை பிரமாண்டமாக தயாரிக்கிறது. உலகநாயகன் கமலஹாசன் தந்தை, மகன் என  இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து 1996 இல் வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற நிலையில், தற்போது ‘இந்தியன் 2’ திரைப்படம் தயாராகி வருகிறது.

   

2019 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்தியன் 2 பட பிடிப்பானது பல்வேறு பிரச்சினைகளால் நிறுத்தப்பட்டது. பல மாதங்களாக நிறுத்தப்பட்ட இப்படப்பிடிப்பு தற்பொழுது மீண்டும் தொடங்கியுள்ளது. கமல்ஹாசன் உடன் இணைந்து காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்க, சித்தார்த், குரு சோமசுந்தரம், ரகுள் பிரீட் சிங், ப்ரியா பவானி சங்கர், சமுத்திரக்கனி, பாபி சிம்ஹா, டெல்லி கணேஷ், ஜெயப்பிரகாஷ், வென்னெலா கிஷோர், ஜார்ஜ் மரியான், மனோபாலா, ஹாலிவுட் நடிகர் பெனிடிக்ட் கேரெட் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

தற்போது இந்தியன் 2 திரைப்படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிகிறது. சமீபத்தில்  டப்பிங் ஸ்டுடியோவில் உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இயக்குனர் ஷங்கர் இருவரும் மிகுந்த கவனத்தோடு இந்தியன் 2 திரைப்படத்திற்கான டப்பிங்கில் பணியாற்றும் வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலானது.

சமீபத்தில் இந்தியன் 2 திரைப்படத்தின் சேனாபதியின் intro வீடியோ வெளிவந்த நிலையில், தற்பொழுது இந்தியன் 2 திரைப்படத்தில் எடுக்கப்பட்டு வரும் காட்சி ஒன்றின் வீடியோ இணையத்தில் லீக்காகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோ தற்பொழுது சமூகவலைத்தளத்தில் படுவைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Continue Reading

More in CINEMA

To Top