கார் ஏற்றி இளம்பெண் கொல்லப்பட்ட சம்பவத்தில்… சிகிச்சை பெற்று வந்த மற்றொரு சிறுமியும் பலி… சோகம்..!!

Spread the love

விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 18 வயது இளம் பெண் யான்சி மற்றும் சென்னை ராமாபுரத்தைச் சேர்ந்த அவரது 17 வயது சிறுமி ஆகியோர் கோயம்பேட்டில் உள்ள ஒரு தனியார் மதுபான விடுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு நடனமாடிக் கொண்டிருந்தபோது, ஒரு கும்பல் அந்தப் பெண்களிடம் தவறாக நடந்து கொண்டு தகராறில் ஈடுபட்டுள்ளது. விடுதி பாதுகாவலர்கள் இரு தரப்பையும் சமாதானப்படுத்தி வெளியே அனுப்பிய பிறகும், வெளியேயும் அவர்களுக்குள் வாக்குவாதம் நீடித்துள்ளது.

இதையடுத்து, அந்தப் பெண்கள் தங்களது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, ஆத்திரமடைந்த அந்த கும்பல் தங்களது காரில் பெண்களின் இருசக்கர வாகனத்தைப் பின்தொடர்ந்து துரத்தியுள்ளது. கோயம்பேடு மேம்பாலம் அருகே வந்தபோது, கார் வேண்டுமென்றே இருசக்கர வாகனத்தின் மீது மிக வேகமாக மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே யான்சி (18) தலைக்காயத்துடன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த கொடூர விபத்தில் இருசக்கர வாகனத்தின் பின்னால் அமர்ந்திருந்த 17 வயது சிறுமி பலத்த காயமடைந்தார். அவர் உடனடியாக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஜூன் 3-ஆம் தேதி அதிகாலை அந்தச் சிறுமியும் உயிரிழந்தார். இதனால் இந்த வழக்கில் பலி எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி, சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேரை இதுவரை கைது செய்துள்ளனர். மேலும், அந்த மதுபான விடுதிக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.

Swetha

Recent Posts

பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் கவலைக்கிடம்… ஐசியூ-வில் தீவிர சிகிச்சை… அதிர்ச்சியில் திரையுலகம்…!

மலையாளத் திரையுலகின் முன்னணி நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான சலீம் குமார், திடீர் உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு,…

3 minutes ago

சைலண்டாக முடிந்த சாவி விவகாரம்… CV சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமாக தூக்கிய எடப்பாடி… அதிமுகவில் உச்சக்கட்ட பரபரப்பு…!

விழுப்புரம் மாவட்ட அதிமுகவில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதரவாளர்கள் மீது பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி (இபிஎஸ்) எடுத்து வரும் அதிரடிப்…

9 minutes ago

தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும்…

18 minutes ago

“அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த சிறுவன்”… கண்மாய் கரையில் காத்திருந்த அதிர்ச்சி…. நண்பர்களே செய்த வெறிச்செயல்… சிவகங்கையை உலுக்கிய பகீர் சம்பவம்….!

சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே உள்ள காரையூர் கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி நாகராஜ் என்பவரின் 15 வயது மகன் அஸ்வின்,…

27 minutes ago

Breaking: “விஜய்க்கு நான் கொடுத்த பச்சைக்கொடி”… ஸ்டாலின் வெளியிட்ட அதிரடித் தகவல்… தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில், அண்மையில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்து எதிர்க்கட்சி வரிசையில்…

32 minutes ago

மகளிருக்கு ரூ.2500 உரிமைத்தொகை?… அதிகாரிகளுக்கு CM விஜய் போட்ட அதிரடி உத்தரவு…. இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்…!

தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழக (TVK) ஆட்சி அமைந்துள்ள நிலையில், எதிர்வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மகளிர் உரிமைத்தொகையை 2,500 ரூபாயாக…

38 minutes ago