தமிழகத்தில் விசாரணை கைதிகளின் தொடர் மரணங்கள் தவெக அரசுக்குக் கடும் அரசியல் நெருக்கடியையும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி வரும் சூழலில், சென்னையில் கைதி ஒருவர் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு மனநலம் பாதிக்கப்பட்டிருந்த ஜாகீர் (27) என்ற வாலிபர், சென்னை கீழ்பாக்கம் அரசு மனநல காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், அங்கு சிகிச்சையிலிருந்த அரவிந்தசாமி என்பவர் ஜாகீரை எதிர்பாராதவிதமாகக் கொடூரமாகத் தாக்கியதில் அவர் தீவிர காயமடைந்தார். உடனடியாக மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்ட ஜாகீர், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் அரசு மனநல காப்பகத்தின் பாதுகாப்பு அமைப்பையும், கைதிகளின் பராமரிப்புச் சூழலையும் மீண்டும் கேள்விக்குறியாக்கியுள்ளது.
