ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் அருகே உள்ள சீஹி கிராமத்தில், தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயதுக் குழந்தை எதிர்பாராதவிதமாக அங்குள்ள 200 அடி ஆழ ஆழ்துளைக் கிணற்றில் நேற்று மாலை 6 மணியளவில் தவறி விழுந்தாள். உடனடியாகத் தேசிய பேரிடர் மீட்புப் படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர். சுமார் பத்து மணி நேரக் கடுமையான போராட்டத்திற்குப் பிறகு, இன்று அதிகாலை 3.50 மணியளவில் அந்தக் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டாள்.
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட உடனடியாக, தகுந்த மருத்துவச் சிகிச்சைக்காகச் சிறுமி மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டு செல்லப்பட்டாள். ஆனால், அங்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், மருத்துவர்களின் முயற்சி பலனளிக்காமல் அந்தப் பிஞ்சு உயிர் பரிதாபமாகப் பிரிந்தது. இரவு முழுவதும் போராடி குழந்தையை உயிருடன் மீட்டெடுத்த நிலையில், மருத்துவமனையில் அவள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சொல்ல முடியாத பெருஞ்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில், அருகில் உள்ள சாலை காலியாக இருந்தபோதிலும், நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தைப் பாதசாரிகள் நடமாடும்…
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிவுகள் வெளியாகவுள்ள நிலையில், தமிழக அரசியல் களத்தில் புதிய வியூகங்களும் மாற்றங்களும்…
பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டம் மீனாபூர் காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில், பயிற்சி வகுப்பிலிருந்து மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிக்கொண்டிருந்த சிறுமியை பைக்…
தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற பயிற்சி காவல் துணை கண்காணிப்பாளர்களுக்கான 14-வது குழுப் பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா…
மயிலாடுதுறையைச் சேர்ந்த 31 வயதான அருண் என்பவருக்கும், காரைக்காலைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம்…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் பிரபல எல்ஜிபிடிகியூ சமூக ஆர்வலரும், ஒப்பனைக் கலைஞருமான மேட் சந்து அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்…