மயிலாடுதுறையைச் சேர்ந்த 31 வயதான அருண் என்பவருக்கும், காரைக்காலைச் சேர்ந்த 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஜூலை மாதம் 12-ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு அருணின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டதால் தம்பதியிடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 28-ஆம் தேதி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், அருண் தாக்கியதில் காயமடைந்த அவரது மனைவி சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அருணின் மனைவி பரபரப்பு புகார் ஒன்றை அளித்தார். அதில், அருணின் கைபேசியை ஆய்வு செய்தபோது, அவர் பல பெண்களுடன் தொடர்பில் இருந்ததும், அவற்றை வீடியோவாக பதிவு செய்து வைத்திருந்ததும் தெரியவந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும், தங்களது முதலிரவு காட்சிகளையும் ரகசியமாக வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு, அதனை இணையதளத்தில் வெளியீடு செய்வதாக மிரட்டியதாகவும் அவர் குற்றஞ்சாட்டியிருந்தார்.
இப்புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்த காவல் துறையினர் சென்றபோது, அருண் விஷச் செடியை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தது தெரியவந்தது. பின்னர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சினேகாபிரியாவிடம் அப்பெண் மீண்டும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, தலைமறைவாக இருந்த அருணை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், அவரது கைபேசியைக் பறிமுதல் செய்து அதில் உள்ள வீடியோ ஆதாரங்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மத்தியப் பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில், காதலனைச் சந்திக்கச் சென்று காணாமல்போன 17 வயது சிறுமி காட்டுப்பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட…
நள்ளிரவு கடந்த அதிகாலை வேளையில் ஏற்பட்ட திடீர் உடல் உபாதை காரணமாக, நிலைமையை உணர்ந்து அவர் உடனடியாகத் தனது நண்பருக்குத்…
தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவைகளை எளிமையாக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்ட "வருகையில்லா ஆவணப்பதிவு" (Paperless / Non-visiting Document Registration) முறை தற்போது…
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சாட்பூர் பகுதிக்கு உட்பட்ட சிவாஜி நகரில், 54 வயதான ராம் ஈஷ்வர் பிரசாத் என்ற தொழிலாளி…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத்தில், ரிஷப் என்ற நபர் தனது உரிமம் பெற்ற ரிவால்வர் துப்பாக்கியைப் பயன்படுத்தி தனது மனைவி…
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள், சென்னை மழைநீர் வடிகால் பணிகள் மற்றும் ஒப்பந்த செவிலியர்களின் போராட்டம் குறித்து மருத்துவம்…