“பெண்கள் பாதுகாப்பிற்குப் புதிய புரட்சி….” சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 2,546 புதிய பணியிடங்கள் அறிவிப்பு… முதல்வர் விஜய் அதிரடி…!!

By Devi Ramu on புரட்டாதி 7, 2026

Spread the love

தமிழகச் சட்டசபையில் காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்திற்குப் பதிலளித்து முதலமைச்சர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “மாநிலத்தின் வளர்ச்சிக்கும் அமைதிக்கும் காவல்துறைதான் முக்கிய அடித்தளம். பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யக் ‘சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை’ அமைக்கப்பட்டு, அதற்காக 2,546 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், ரூ.357 கோடி மதிப்பீட்டில் நவீன உபகரணங்கள், 327 நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் 109 இருசக்கர வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “போதைப்பொருள் கலாசாரத்தை வேரோடு ஒழிக்க 65 சிறப்புத் படைகள் அமைக்கப்பட்டுத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. காவல் நிலைய மரணங்கள் குறித்து வெளிப்படையான விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதுடன், தவறு செய்தவர்கள் காவல்துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் சட்டம் தன் கடமையைச் செய்யும்” எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.