அண்ணாமலை ஆட்டம் தொடங்கியது.. இரவோடு இரவாக வெளியிட்ட அறிவிப்பு… பாஜகவை அதிரவைத்த அந்த விஷயம்…!

By Nanthini on ஆனி 8, 2026

Spread the love

பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனது புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்கியுள்ள நிலையில், தற்போது அதன் அடுத்தகட்ட நகர்வாக ‘தன் இயக்கம்’ சார்பாக மேடைப் பேச்சாளர்களை உருவாக்குவதற்கான 3 நாள் சிறப்புப் பயிற்சி முகாமை அறிவித்துள்ளார். அரசியல் இயக்கம் ஆரம்பித்த பிறகு அவர் வெளியிட்டுள்ள முதல் அறிவிப்பு இதுவாகும்.

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் வரும் ஜூன் 19ஆம் தேதி தொடங்கவுள்ள இப்பயிற்சி முகாமில், புதிய அரசியல் பாதையில் பயணிக்கவும், இயக்கத்தின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவும் தகுதியான பேச்சாளர்கள் தயார் செய்யப்பட உள்ளனர். இந்த மேடைப் பேச்சு பயிற்சியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் உடனடியாக தங்களது பெயர்களை முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றும் அண்ணாமலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.