“ஒரே நாளில் மநீம-வுக்கு விழுந்த பலத்த அடி”…. ‘WE THE LEADERS’ அமைப்பில் இணைந்த தென் சென்னை மா.செ… அண்ணாமலையின் அடுத்த ஆட்டம் ஆரம்பம்….!

By Nanthini on ஆடி 15, 2026

Spread the love

சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடப் போவதில்லை என்ற அறிவிப்பு, அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் மநீம நிர்வாகிகள் பலர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு மாற்றுப் பாதையை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில், மநீம தென் சென்னை மாவட்டச் செயலாளர் பாலமுருகன், கட்சியின் இந்த முடிவில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக தனது ஆதரவாளர்களுடன் \கரு.நாகராஜன் முன்னிலையில் ‘WE THE LEADERS’ என்ற அமைப்பில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். மேலும், தென் சென்னை மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும், அடுத்தடுத்த கட்டமாக அண்ணாமலையுடன் கைகோர்க்கத் தயாராகி வருவதாகக் கூறப்படுவதால், மக்கள் நீதி மய்யம் கட்சி தற்போது கடுமையான உட்கட்சி பூசலையும் சரிவையும் சந்தித்து வருகிறது.