“அடுத்த 6 மாதங்களுக்கு நோ பார்ட்டி”…. அண்ணாமலையின் ரகசிய ‘பிளான் B’.. பின்னணியில் இருக்கும் ‘அந்த’ இயக்கம்… கசிந்த சீக்ரெட்….!

Spread the love

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விரைவில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகப் பரவிய வதந்திகளுக்கு மத்தியில், அவர் தற்போது புதிய இயக்கம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2020-இல் பாஜகவில் இணைந்து, குறுகிய காலத்திலேயே மாநிலத் தலைவர் பதவியை எட்டிய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலையின் பதவி, கடந்த ஆண்டு பறிக்கப்பட்டு நயினார் நாகேந்திரனிடம் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்திய தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி தோல்வியைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குவார் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பரவலாகப் பேசப்பட்டு வந்தது.

ஆனால், அண்ணாமலை உடனடியாக அரசியல் கட்சி தொடங்கும் முடிவைக் கைவிட்டு, அதற்குப் பதிலாக முதற்கட்டமாக ஒரு தனி இயக்கத்தைக் கட்டமைக்க முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது. தற்போது அவர் கோவையை மையமாகக் கொண்டு நடத்தி வரும் “We the Leaders” என்ற தொண்டு நிறுவனத்தை ஒரு சமூக இயக்கமாக மாற்றவோ அல்லது புதியதொரு பெயரில் இயக்கத்தைத் தொடங்கவோ ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்த உத்தி மூலம், அடிமட்ட அளவில் தனக்கான ஆதரவுத் தளத்தை வலுப்படுத்த அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த புதிய இயக்கத்தின் முக்கிய நோக்கம், அண்ணாமலையைப் போன்ற ஒத்த எண்ணம் கொண்ட நபர்களை ஒரே அணியில் ஒருங்கிணைப்பதாகும். குறிப்பாக, அரசியல் ஆர்வம் கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களை இந்த இயக்கத்தின் கீழ் கொண்டு வந்து, அவர்களுக்குத் தேவையான அரசியல் சார்ந்த பயிற்சிகளையும், களப்பணிகளுக்கான வழிகாட்டுதல்களையும் வழங்க அண்ணாமலை திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒரு புதிய தலைமுறை தலைவர்களை உருவாக்க அவர் முயன்று வருகிறார்.

தற்போதைய சூழலில், அடுத்த 6 மாதங்களுக்கு புதிய அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் அண்ணாமலைக்கு இல்லை என்றே கூறப்படுகிறது. முதலில் இந்த சமூக இயக்கத்திற்கு மக்கள் மத்தியிலும், இளைஞர்கள் மத்தியிலும் கிடைக்கும் வரவேற்பையும் செல்வாக்கையும் பொறுத்தே, அவர் தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வை மேற்கொள்ள உள்ளார். இந்த புதிய இயக்கத்தின் செயல்பாடுகள் தமிழக அரசியலில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Nanthini

Recent Posts

இனிமே எவனும் ஏமாத்த முடியாது!.. ஸ்கேன் பண்ணா மொத்த ஜாதகமும் அவுட்.. இன்று முதல் அமலுக்கு வந்த புதிய UPI ரூல்.. ஆன்லைன் திருடர்களை அலறவிட்ட மத்திய அரசின் புதிய அதிரடி..!!

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடக்கும் மோசடிகளுக்கும், கவனக்குறைவால் தவறான நபர்களுக்குப் பணம் மாறுவதற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இன்று (ஜூன்…

5 minutes ago

“அவனை என் கையில் கொடுங்க” துண்டு துண்டாகக் கிழிச்சிடுவேன்… ஒன்றரை வயதுக் குழந்தையைப் பறிகொடுத்த தாயின் நெஞ்சை உலுக்கும் கோபம்..!!

உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், விராஜ் (என்ற ஜித்தேந்திர பதக்) என்ற இளைஞன், ஒன்றரை வயதுக் குழந்தையான ஆரவ்வை…

6 minutes ago

“அண்ணாமலை பதில் சொல்லியே ஆகணும்” தனிக்கட்சி தொடங்குகிறரா..? பாஜக போட்ட உத்தரவு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை புதிய கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளதாக வெளியாகும் தகவல்கள் வெறும் வதந்தி என்று பாஜக…

14 minutes ago

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.2000 உதவித்தொகை கிடையாது..? வெளியான அதிர்ச்சி தகவல்..!!

மாற்றுத்திறனாளிகளுக்கான ₹2,000 உதவித்தொகைத் திட்டத்தில் புதிய சிக்கல் எழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் எந்தவித முறையான காரணமும் இன்றி…

23 minutes ago

“அப்போ எல்லாமே உண்மையா..?” உள்ளாட்சி தேர்தலில் யாருடன் கூட்டணி.? டுவிஸ்ட் வைத்த வைகோ… செம அப்செட்டில் ஸ்டாலின்…!!

உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் முக்கிய சூசகமான தகவலை வெளியிட்டுள்ளார். உள்ளாட்சித் தேர்தல்…

32 minutes ago

அண்ணாமலையின் புதிய கட்சியின் பெயர் இதுவா…? ஷாக் ஆன பாஜக மேலிடம்… அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு..!!

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அக்கட்சியிலிருந்து விலகி புதிய கட்சி ஒன்றைத் தொடங்குகிறார் என்ற தகவல் சமூக ஊடகங்களில் (SM)…

36 minutes ago