தமிழகத்தில் உருவாகும் புதிய கட்சி…? அண்ணாமலை எடுத்த அதிரடி முடிவு… ரகசியத்தை உடைத்த திமுக ..!!

By Soundarya on மாசி 12, 2026

Spread the love
திமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் சபாபதி மோகன், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை குறித்துத் தெரிவித்துள்ள இந்த அதிரடி விமர்சனங்கள் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குள் தமிழகத்தில் ஒரு புதிய கட்சி உருவாக உள்ளது. பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை தான் அந்தப் புதிய கட்சியைத் தொடங்கவிருக்கிறார்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.அண்ணாமலை தற்போது பாஜகவில் பெயரளவிலேயே இருப்பதாகவும், அவர் கட்சியில் இருக்கும் நாட்கள் எண்ணப்பட்டு வருவதாகவும், அண்ணாமலை தினந்தோறும் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்; ஆனால் அவரது அரசியல் எதிர்காலம் பாஜகவில் இல்லை என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில் இந்தப் பேச்சு அமைந்துள்ளது.