செங்கோட்டையன் நேற்று மனம்திறந்து பேசியபோது, பிரிந்தவர்களை ஒன்றிணைக்க 10 நாள் கெடு விதிக்க, அதற்கு பதிலாக நேற்று அவரை கட்சிப் பொறுப்புகளில் இருந்து EPS நீக்கினார். இதனால் அரசியல் களம் பரபரப்பாகவே உள்ளது. செங்கோட்டையனின் ஆதரவாளரான சித்துராஜ், பல்லடம் தெற்கு ஒன்றிய செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் 2000 செங்கோட்டையன் ஆதரவாளர்கள் ராஜினாமா செய்தார்கள்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாக NDA கூட்டணியில் நடக்கும் நிகழ்வுகள் திருப்தியாக இல்லை என அண்ணாமலை கூறியுள்ளார். TTV தினகரன் விலகல், செங்கோட்டையனின் பொறுப்பு பறிப்பால் அதிமுகவில் மீண்டும் பிளவு ஏற்படும் சூழல் ஆகியவை NDA கூட்டணிக்கு புதிய நெருக்கடியாக அமைந்துள்ளது. எனவே, புதிதாக ஒரு கட்சியை அழைப்பதை விட, இருக்கும் கூட்டணியை வைத்து கூட்டணியை வலுப்படுத்துவது எப்படி என்பதை பார்க்க வேண்டும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.
