“ஆட்சியை விட்டுப் போங்க.. அதான் என் கனவு” – திமுக அரசை விளாசிய அண்ணாமலை…!!

By Soundarya on தை 22, 2026

Spread the love

சென்னையில் இன்று (ஜனவரி 22, 2026) செய்தியாளர்களைச் சந்தித்த அண்ணாமலையிடம், மக்களின் கனவுகளைக் கேட்டறியும் திமுக அரசின் புதிய திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “முதலமைச்சரிடம் எனது கனவு என்ன என்பதை ஏற்கனவே சொல்லிவிட்டேன். நீங்கள் தயவுசெய்து ஆட்சியை விட்டுப் போய்விடுங்கள், அதுதான் எனது ஒரே கனவு” என்று காட்டமாகக் குறிப்பிட்டார்.

தமிழக அரசு மாணவர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்களின் எதிர்காலக் கனவுகள் மற்றும் தேவைகளைத் தெரிந்துகொண்டு, அதற்கேற்பத் திட்டங்களைச் செயல்படுத்த ‘உங்க கனவை சொல்லுங்க’ என்ற முன்னெடுப்பைத் தொடங்கியுள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்களின் கருத்துக்களைப் பெற இந்தத் திட்டம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக அரசின் ஒவ்வொரு திட்டத்தையும் பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில், அரசின் ஆக்கப்பூர்வமான முயற்சி என திமுக கூறும் இந்தத் திட்டத்தை, ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்த அண்ணாமலை பயன்படுத்திக் கொண்டுள்ளார்.