நான் தொழில் செய்வேன், அரசியலுக்கு வருவேன், விவசாயமும் செய்வேன் என்று பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். பாஜக மாநில தலைவராக இருந்த அண்ணாமலை தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு தற்போது விவசாய மற்றும் பிசினஸ் செய்து வருகின்றார். இதனிடையே கர்நாடகாவில் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பில் ரியல் எஸ்டேட் தொழில் தொடங்கிய இருப்பதாக கூறப்படுகிறது.
ஒவ்வொரு வீடும் கோடிக்கணக்கில் விற்பனை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி வரும் நிலையில் இது தொடர்பாக இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அண்ணாமலை, நான் ரியல் எஸ்டேட் பிசினஸ் செய்வதில் என்ன தவறு. என்னுடைய வாழ்க்கையை நான் வாழ்கிறேன். நான் என்ன மண்ணை சாப்பிடுவதா?. நான் பிசினஸ் செய்கிறேன். யாரையாவது அடித்து பிடுங்குகிறேனா இல்லை மிரட்டுகிறேனா. உங்களுடைய பணத்தை வாங்கிக் கொண்டேனா. என்னுடைய தொழில் நான் செய்கிறேன்.
இதில் என்ன தவறு என எதை நீங்கள் பார்த்தீர்கள். நான் எங்கிருந்து சாப்பிடுவேன், என் குழந்தைகளுக்கு எப்படி பீஸ் கட்டுவேன். எதை செய்தாலும் நியாயமான முறையில் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். எல்லா வேலைகளையும் நான் செய்வேன். இதுவரை ஒரு ரூபாய் கூட கட்சியிலிருந்து வாங்கியது கிடையாது. நான் என்ன பிச்சை எடுக்க முடியுமா? நான் தொழில் செய்து தான் ஆக வேண்டும்.
ஒரு நாளைக்கு குறைந்தது 2000 ரூபாய் ஆவது செலவாகும். இதனை உங்கள் பாக்கெட்டில் இருந்து பிடுங்குகிறேனா. நான் தொழில் செய்து என்னுடைய வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைக்கிறேன். பெருமையாக தொழில் செய்து அரசுக்கு வரி கட்டுவேன். இன்னும் பல தொழில்கள் ஆரம்பிக்கப் போகிறேன். நான் சுயமாக வணிகம் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து தான் என் குடும்பத்தை கவனிக்க வேண்டும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் கன்னோஜ் மாவட்டத்தில், மனைவியின் மீது கள்ளத்தொடர்பு இருப்பதாகச் சந்தேகப்பட்ட கணவன் , அவரை நாற்காலியில் கட்டிவைத்து…
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…