தமிழக அரசியலில் குறுகிய காலத்தில் தனக்கெனத் தனித்துவமான இடத்தைப்பிடித்த அண்ணாமலை, வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் தனது அதிரடியான அரசியல் பாதையை கையில் எடுக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழக வெற்றிக் கழகம் தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் முறைகேடுகளை உன்னிப்பாகக் கண்காணித்து தோலுரிக்கும் வகையில் சிறப்பு ஆய்வுக் குழு ஒன்றை அவர் அமைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
அதேவேளையில், இளைஞர்களை ஒருங்கிணைக்கும் ‘வி தி லீடர்ஸ்’ (WE THE LEADERS) அமைப்பின் கட்டமைப்பை மாநிலம் முழுவதும் வலுப்படுத்தும் பணிகளிலும் அவர் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றார். இத்தகைய தொடர் நடவடிக்கைகளால், வரும் 2026-2027 காலகட்டத்தில் அண்ணாமலையின் பழைய பாய்ச்சலையும் ஆக்ரோஷமான அரசியல் அணுகுமுறையையும் மீண்டும் களத்தில் பார்க்கலாம் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் நம்பிக்கையுடன் தெரிவிக்கின்றன.
