சென்னையில் இன்று அண்ணாமலை தலைமையில் ‘We the Leaders’ அமைப்பினர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மேற்கொள்கின்றனர். இப் பேரணியின் ஒரு பகுதியாகப் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நடப்படவுள்ள நிலையில், மறைந்த புகழ்பெற்ற நடிகர் விவேக்கின் மனைவி மற்றும் அவரது ரசிகர்கள் இதில் திரளாகப் பங்கேற்கின்றனர். கடந்த மாதம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வை வெற்றிகரமாக நடத்திய இந்த அமைப்பினர், அதன் தொடர்ச்சியாக இம்மாதம் இயற்கையைப் பாதுகாக்கும் உயரிய நோக்கில் இம்மாபெரும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பணியை முன்னெடுத்துள்ளனர்.
