இன்று நடைபெறும் பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில், 2026 சட்டமன்ற் தேர்தல், கட்சியில் நிலவும் கருத்து வேறுபாடுகள், புதிய நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படுகிறது. எனவே இவ்வளவு முக்கியமான கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்கவில்லை என்று தகவல் பரவியது. இந்நிலையில் தான் அண்ணாமலை டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக விளக்கமளித்துள்ளார்.
