BREAKING: அண்ணாமலை விலகல்… தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு….!

By Nanthini on பங்குனி 26, 2026

Spread the love

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வரவிருக்கும் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அக்கட்சியின் தலைமைக்கு கடிதம் எழுதியிருப்பது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாமலை போட்டியிட ஆர்வமாக இருந்த கவுண்டம்பாளையம், சிங்காநல்லூர் அல்லது அவரது சொந்த ஊரான அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகள் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் பாஜகவிற்கு ஒதுக்கப்படாததே இந்த திடீர் முடிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

அவர் தேர்தல் களத்திலிருந்து விலகிய செய்தி வெளியானதிலிருந்து, சமூக வலைதளங்களில் அவரது ஆதரவாளர்கள் பலரும் தங்களது அதிருப்தியையும் கவலையையும் வெளிப்படுத்தி வருகின்றனர். கட்சியின் வளர்ச்சிக்காகத் தீவிரமாகப் பணியாற்றி வரும் ஒரு தலைவர், தனக்கு விருப்பமான தொகுதிகள் கிடைக்கவில்லை என்பதற்காக ஒதுங்குவது கட்சிக்கும் தொண்டர்களுக்கும் பின்னடைவாக அமையக்கூடும் என அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.