திடீர் நியமனம்….. ‘We The Leaders’ அமைப்பில் அண்ணாமலை எடுத்த அந்த அதிரடி முடிவு…. உத்தம ராமசாமிக்கு முக்கிய பதவி….!

By Nanthini on ஐப்பசி 21, 2026

Spread the love

பாஜக முன்னாள் மாநில தலைவர் K. அண்ணாமலை தற்போது தனியாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் விஜயதசமி நன்னாளில், ‘We The Leaders’ அமைப்பின் மாநில பொருளாளராக திரு. பாலாஜி உத்தம ராமசாமி அவர்களை நியமித்துள்ளார். அமைப்பின் நிர்வாகக் கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தவும், நிதி நிர்வாகத்தைச் சீராகவும் சிறப்பாகவும் ஒருங்கிணைக்கும் நோக்கத்துடனும் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த புதிய பொறுப்பு மற்றும் வழிகாட்டுதல், அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கும் ஒட்டுமொத்த வலிமைக்கும் பெரும் துணையாக அமையும் என்று அண்ணாமலை அவர்கள் தனது X (ட்விட்டர்) பதிவில் பாலாஜி உத்தம ராமசாமி அவர்களுக்கு வாழ்த்துகளையும் நம்பிக்கையையும் தெரிவித்துள்ளார்.