முதல்வர் அதுக்கு பதில் சொல்லணும்…! விஜய் வந்த பிறகு குழப்பத்தில் திருமாவளவன்… போட்டு தாக்கிய அண்ணாமலை…!!

By Devi Ramu on ஐப்பசி 13, 2025

Spread the love

பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, விஜய் அரசியலுக்கு வந்த பிறகு திருமாவளவனின் எண்ண ஓட்டம் குழப்பத்தில் இருக்கிறது. தவறு செய்த பின் தப்பிப்பதற்காக பாஜக ஆர்.எஸ்.எஸ் என பழி போடுவதை திருமாவளவன் நிறுத்த வேண்டும்.

திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக சித்தாந்தத்தை விட்டு கூட்டணி சேரலாம். சாதிகளுக்கு எதிரி எனக் கூறிவிட்டு சாதி பெயரில் அரசியல் செய்கிறது திமுக. இருமல் மருந்து விவகாரத்தில் பதிலளிக்க முதல்வருக்கு பொறுப்பு உண்டு. ஆனால் இரு அதிகாரிகளை மட்டும் இடை நீக்கம் செய்துவிட்டு தனக்கு இதில் தொடர்பில்லை என அரசு மாயத் தோற்றத்தை உருவாக்குகிறது எனக் கூறியுள்ளார்.