தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இன்று புதுச்சேரியில் பொதுக்கூட்டம் நடக்கிறது. முதலில் ரோடு ஷோ நடத்த அனுமதி மறுத்த புதுச்சேரி அரசு பிறகு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் இந்த பொதுக்கூட்டத்தை நடத்திக் கொள்ள டிவிகே கட்சிக்கு அனுமதி தந்துள்ளது. புதுச்சேரியில் நடக்கும் தவெக கூட்டம் குறித்த கேள்விக்கு பதிலளித்த பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, கரூர் சம்பவம் போல மீண்டும் ஒருமுறை நடந்தால் அரசியலில் மக்களில் முழுமையான நம்பிக்கையை இழந்துவிடுவார்கள் என்று நடிகர் விஜயை கடுமையாக விமர்சித்துள்ளார்.
