“கனிமொழிக்கு மனநல மருத்துவர் தேவை” அந்நியன், அம்பி, ரெமோ போல மாறி மாறிப் பேசுகிறார்.. காட்டமாக விமர்சித்த அண்ணாமலை..!

By Soundarya on மாசி 5, 2026

Spread the love

அதிமுக மற்றும் திமுக ஆட்சியின் மதுபானக் கொள்கைகள் குறித்துப் பேசி வரும் திமுக எம்.பி கனிமொழிக்கு, பாஜக அண்ணாமலை மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். டாஸ்மாக் கடைகளை மூடுவோம் எனத் தற்போது பேசி வரும் கனிமொழி, ஒரு நல்ல மனநல மருத்துவரைப் பார்க்க வேண்டும் என அண்ணாமலை கிண்டலடித்துள்ளார். தேர்தலுக்கு முன்னால் மட்டும் இது போன்ற வாக்குறுதிகளை அளிக்கும் கனிமொழி, தேர்தல் முடிந்ததும் அந்தப் பேச்சிலிருந்து “எஸ்கேப்” ஆகிவிடுவார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

கனிமொழியின் இந்தப் பேச்சுகளைத் திரைப்படக் கதாபாத்திரங்களுடன் ஒப்பிட்டுள்ள அண்ணாமலை, அவர் அந்நியன் படத்தில் வரும் அம்பி, ரெமோ, அந்நியன் பாத்திரங்களைப் போலச் சூழலுக்குத் தகுந்தாற்போல் மாறி மாறிப் பேசுவதாக விமர்சித்துள்ளார். ஆட்சியில் இருக்கும்போது ஒரு பேச்சும், தேர்தல் வரும்போது ஒரு பேச்சும் பேசுவது திமுகவின் வாடிக்கை எனத் தெரிவித்த அண்ணாமலை, மதுவிலக்கு விவகாரத்தில் திமுக மக்களை ஏமாற்றுவதாகச் சாடியுள்ளார்.