“திமுக, அதிமுக மாஜிக்களுக்கு அண்ணாமலை வீசிய வலை”…. ரகசிய ஆபரேஷனால் அதிரும் தமிழக அரசியல்….!

By Nanthini on புரட்டாதி 28, 2026

Spread the love

‘WE THE LEADERS’ அமைப்பின் கட்டமைப்பை வலுப்படுத்தும் நோக்கில், தமிழக அரசியலின் முக்கிய மாஜி நிர்வாகிகளை தன் பக்கம் இழுக்க அண்ணாமலை தீவிர காய்களை நகர்த்தி வருவதாகக் தகவல்கள் வெளியாகியுள்ளன. தான் பாஜக தலைவராகப் பொறுப்பில் இருந்த காலத்தில், தன்னை நம்பி மாற்றுக்கட்சிகளிலிருந்து இணைந்து தற்போது சுணக்கத்தில் இருக்கும் திமுக மற்றும் அதிமுகவின் முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் மூத்த தலைவர்களுடன் அவர் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.

குறிப்பாக, தென் தமிழகத்தில் இந்த அமைப்பின் பலம் குறைவாக இருப்பதால், அப்பகுதியைச் சேர்ந்த செல்வாக்குமிக்க தென்மண்டலப் பிரமுகர்களைக் கண்டறிந்து இணைப்பதில் அண்ணாமலை அதிக கவனம் செலுத்தி வருகிறார்; அப்படி இணையும் முக்கிய நிர்வாகிகளுக்கு அமைப்பில் மாநில அளவிலான உயரிய பொறுப்புகளை வழங்கவும் அவர் ஆயத்தமாகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.