தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரோடு மாவட்டம் பர்கூர் மலையில் 30க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. தமிழக கர்நாடக எல்லையான அங்கு குட்டையூர், மட்டிமரத்தள்ளி உள்ளிட்ட மலை கிராமங்களுக்கு நேரடியாக செல்ல பாதை கிடையாது. வனப்பகுதி பகுதிக்கு மத்தியில் கர்கேண்டி நீரோடை பள்ளம் வழியாக இருபது கிலோ மீட்டர் பயணித்து அந்த கிராமங்களுக்கு செல்ல முடியும். கனமழையின் காரணமாக அங்கு காட்டாறு ஓடுவதால் பொதுமக்கள் முடங்கி கிடக்கிறார்கள்.
இங்கு உயர்மட்ட பாலம் அமைக்குமாறு பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்தும் திமுக அரசு கண்டுகொள்ளாமல் இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு சாலைகள் அமைக்க பாலங்கள் கட்ட 78,000 கோடி ரூபாய் செலவிட்டதாக பட்ஜெட் அறிக்கையில் கூறுகிறது. ஆனால் பல கிராமங்களில் இன்னும் சாலை வசதி வரவில்லை. நிதியும் எங்கு செல்கிறது?என்று தெரியவில்லை. சாலைகள் அமைத்ததாக கணக்கு காட்டி 78 ஆயிரம் கோடி ரூபாய் எங்கு சென்றது என்பதற்கு முதல்வர் ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…
மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள்…
ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…
தமிழகத்தில் விரைவில் நடைபெறவுள்ள அம்பாசமுத்திரம் உள்ளிட்ட 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் களத்தில் அரசியல் சூடுபிடித்துள்ள சூழலில், அம்பாசமுத்திரம் தொகுதியில்…
பாகிஸ்தானை தளமாகக் கொண்ட ஐ.எஸ்.ஐ ஆதரவு பெற்ற ஷெஹ்சாத் பாட்டி தலைமையிலான தீவிரவாத வலைப்பின்னல், இந்திய இளைஞர்களை இலக்கு வைத்து…