தமிழ்நாட்டில் வருகின்ற 2026 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுகாக அனைத்துக் கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் , 21 நிறுவனங்களும் அதன் மூலம் 10,800 கோடி வருமானத்தை ஈட்டு வருகிறார் டி.ஆர்.பாலு என்று கூறியிருந்தார். இன்று பத்திரிக்கையாளரை சந்தித்த டி.ஆர்.பாலுவிடம் பத்திரிகையாளர்கள் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதை பற்றி கேள்வி எழுப்பினர். டி ஆர் பாலு மீடியாவை பார்த்து போயா என்று சொல்லி எஸ்கேப் ஆகிவிட்டார்.
அந்த இடியட் கேட்டதற்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது அதற்கெல்லாம் எனக்கு நேரமில்லை என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி முக்கிய பிரமுகர்கள் 12 பேரின் சொத்து பட்டியலை வெளியிட்டுள்ளார். டி.ஆர்.பாலு மற்றும் கனிமொழி அவர்களும் விளக்கம் கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பி வைத்துள்ளனர். இதுவரை அண்ணாமலை பதில் அளிக்கவில்லை.
அதனால் டி.ஆர்.பாலு சென்னை பெருநகர 17வது நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது தாக்கல் செய்துள்ளார். வழக்கு தொடர்பாக ஆஜராகி விளக்கம் அளித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த டி .ஆர்.பாலு எனக்கு சொந்தமாக 21 நிறுவனங்கள் உள்ளதாக கூறியிருந்தனர். ஆனால், அதில் 18 நிறுவனங்களுக்கும் எனக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று நீதிபதியிடம் விளக்கம் கொடுத்துள்ளேன். ஆகையால் செப்டம்பர் 22ஆம் தேதி வழக்கை ஒத்தி வைத்துள்ளார்.
