சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த இவர், தனக்குத் தாகம் எடுத்தபோது சாதாரண குழாய் நீரையோ அல்லது மினரல் வாட்டரையோ குடிக்க விரும்பவில்லை. “சுத்தமான நீரை” குடிக்க வேண்டும் என்ற வினோத ஆசையால், அவர் செய்த காரியம் இணையவாசிகளைப் புருவம் உயர்த்த வைத்துள்ளது.
அன்னா லிண்டே தனது தாகத்தைத் தீர்த்துக் கொள்ள ஒரு தனி ரக ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்துக்கொண்டு, அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஒரு பிரம்மாண்ட பனிப்பாறைக்கு நேரடியாகச் சென்றுள்ளார். அங்கு ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி, பனிப்பாறையில் இருந்து உருகி வரும் இயற்கையான நீரை நேரடியாகக் குடித்து மகிழ்ந்துள்ளார். இதற்காக அவர் பல கோடி ரூபாயைச் செலவழித்திருப்பார் என்று கணிக்கப்படுகிறது.
இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த அன்னா, “மற்றவர்கள் எப்படிச் சாதாரணத் தண்ணீரைக் குடிக்கிறார்கள் என்று எனக்குத் தெரியவில்லை” என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பணம் இருந்தால் இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா?” என்றும், ஒரு சில சொட்டுத் தண்ணீருக்காக இவ்வளவு பணத்தை வீணடிப்பதுடன் சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதாகக் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
