பிரபல நடிகரான எம்ஜிஆரும் அண்ணாவும் சத்யா ஸ்டூடியோவில் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது கவிஞர் வாலி வந்திருப்பதாக உதவியாளர் வந்து சொன்னார். உடனே அண்ணா அவரை வர சொல்லுங்க என கூறினார்.

இந்த நிலையில் பெற்றால் தான் பிள்ளையா என்ற படத்திற்காக பாடலை எழுதிக் கொண்டு வாலி எம்.ஜி.ஆரிடம் காட்ட வந்துள்ளார். உள்ளே வந்த வாலி அண்ணா, எம்ஜிஆர் ஆகிய இருவருக்கும் வணக்கம் வைத்துள்ளார். அப்போது அண்ணா வாலியை அருகே உட்கார சொல்லி என்ன வாலி பாட்டை கேட்கலாமா என கூறியுள்ளார். மேலும் வாலி பாடலை பாடி காட்டுவது தான் வழக்கம்.

இதனால் எம்.ஜி.ஆர் வாலியிடம் பாடலை பாடி காட்டுங்கள் என கூறினார். உடனே வாலி சர்க்கரை கட்டி பாப்பாத்தி என் மனசு வச்சுக்க காப்பாத்தி என்று பாடி காட்டினார். அண்ணா குறுக்கிட்டு பல்லவியை இன்னொரு முறை பாடி காட்ட சொன்னார். வாலி மீண்டும் பாடி காட்டினார். அப்போது அண்ணா அந்த பாப்பாத்தி என்கிற வார்த்தையை மாத்திடுங்க என்றார்.

வாலி சரியாக தானே இருக்கிறது என தயங்கிக்கொண்டே கூறினார். அண்ணா மீண்டும் அந்த வரியை மாற்ற சொன்னார். இதனால் பாப்பாத்தி என்ற வார்த்தையை ராசாத்தி என வாலி மாற்றினார். தேவையில்லாமல் நாம் யார் மனதையும் புண்படுத்த வேண்டாமே என அண்ணா கூறியுள்ளார். அந்த காலத்திலும் கடமை, கண்ணியம், கட்டுப்பாடோடு பிரபலங்கள் இருந்துள்ளனர்.

#image_title
